Friday, July 24, 2015

வஹியாய் இறங்கிய குர்ஆனும், இன்றைய குர்ஆனும்

உலகத்தில் ஆங்காங்கே அவ்வப்போது  சில நிகழ்சிகள்  வெளியாகி  இஸ்லாம் என்கிற மார்க்கம் சொல்லுகிற பழம்பெரும் செய்திகளுக்கு,  ஆதாரங்களை அள்ளி தெளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில்  உலகை "உலுக்கக்கூடிய "  என்றும் " ஈது "  கொண்டாடி களித்திருக்கும் உலக முஸ்லிம்களுக்கு பேருவகை கொள்ளும்படியான செய்தி என்பதாகவும்  சொல்லி "கிறிஸ்டியன் மானிடர் "  என்ற இங்கிலாந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், உலகையே பிரமிப்படைய வைக்க வல்லதாக,  உலகின் மிகப்பழமையான கையெழுத்து பிரதி என்று சொல்லக்கூடிய, கைகளால் எழுதப்பட்ட  இரண்டு  திரு குர்ஆன் பக்கங்களை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

“Researchers conclude that the Qur’an manuscript is among the earliest written textual evidence of the Islamic holy book known to survive,” the university wrote in an official statement. “This gives the Qur’an manuscript in Birmingham global significance to Muslim heritage and the study of Islam.”
புராதன பொருள்களின் பழமையை தீர்மானிக்க வல்ல நவீன  "ரேடியோ கார்பன் அனாலிசிஸ் "  சோதனை  ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தால், இவ்விரு கையெழுத்து பிரதிகளிலும்  செய்யப்பட்டு.  அவை  95 %  அளவிற்கு உறுதியாக ,  AD  570 மற்றும் AD 632 இக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை யாக   இருக்கககூடுமென்று அறிவிப்பு  செய்திருக்கிறார்கள்.

AD 570 மற்றும் AD 632 இக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படுகிற  நபி முஹம்மது ( சல்லல்லாஹு அலைஹிவசல்லம் ) அவர்களின் இறப்பிற்கு  பின்   20 ஆண்டுகளுக்கு உட்பட்ட  கால கட்டத்தை சார்ந்த கையெழுத்து பிரதிகளாக இருக்க கூடும் என்பதாக ஆராய்ச்சி  முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
இந்த கையெழுத்து பிரதிகள் நம்மை, இஸலாம் நிறுவப்பட்ட ஆரம்ப காலகட்டத்திற்கு அழைத்து செல்கிறது என்பதாக, பிர்மிங்காம் பல்கலைகழகத்தை சேர்ந்த  இஸ்லாம் மற்றும் கிருத்தவ பேராசிரியரான டேவிட் தாமசும், இன்டெர் ரிலிஜியஸ் ரிலேசன்ஸ் பேராசிரியர் நாதிர் தின்ஷா என்பவரும் தெரிவிக்கிறார்கள்

AD 610 வாக்கில் நபிகளாருக்கு , வானவர் ஜிப்ரீல் மூலம் வஹியாக இறங்க தொடங்கிய  திரு குர்ஆன்,  மனிதர்களால் மனனம் செய்யப்பட்டு                    பாதுகாக்கப்பட்டதாகவும்,   நபிகளாருக்கு பின்னால்,  முதல் கலிபா அபூபக்கர் (ரலி),  முதன் முதலில் புத்தக வடிவில் திரு குர்ஆனை தொகுக்க ஆணை  இட்டதாகவும், அப்பணி 3 ஆம் கலிபா உத்மான் (ரலி) காலத்தில           AD 650 வாக்கில்,  முழுமை அடைந்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.

இன்று முஸ்லிம்களிடையே இருக்கும் திரு குர்ஆன், நபிகளாருக்கு அருளப்பட்ட அதே குர் ஆன் தான் , எந்த வித மாற்றமோ,இடை சொறுகள்களோ இல்லாமல்,  தங்களிடையே  இருப்பதாக நம்புகிறார்கள், இன்று கிடைத்திருக்கும் இந்த கையெழுத்து பிரதிகளின் ஆதாரம், அவர்களின் நம்பிக்கையை உறுதி படுத்துவது போலவே இருக்கிறது, என்பதாகவும் மேலும் எழுதுகிறார்கள்.

"These portions must have been in a form that is very close to the form of the Qu’ran read today, supporting the view that the text has undergone little or no alteration and that it can be dated to a point very close to the time it was believed to be revealed,” they added.

இரண்டு  இதழ்களில், பழைய காலகட்ட அரபி எழுத்து வடிவான " hijaazi " எழுத்துருவில்,  18 வது  20வது  சூராக்களின் பகுதிகள் மை கொண்டு  எழுதப்பட்டுள்ளன.  இவை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக, 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த  குர் ஆன்  பிரதிகளுடன் கலந்து கிடந்ததால்  இத்தனை காலமும்  கண்டு பிடிக்கப்படாமல் இருந்திருக்கின்றன .

  Preserved on two parchment leaves, the text contains parts of Suras (chapters) 18 to 20 written with ink in an early form of Arabic script known as Hijazi. For nearly a century, the manuscript had been misplaced with leaves of a similar Quranic manuscript, which is also datable to the late seventh century.

இந்த கையெழுத்து பிரதிகள், பல்கலைகழகத்தின் "  மின்கானா தொகுப்பு "  என்கிற மத்திய கிழக்கு நாடுகளின் கையெழுத்து பிரதிகள்  அடங்கிய தொகுப்பை சார்ந்தது, காட்பரிஸ் ஆராய்ச்சி நூலகத்திற்கு சொந்தமானது.  இராக்கில் பிறந்து இங்கிலாந்தில் தங்கி விட்ட  அல்போன்சோ மின்கானா என்ற பாதிரியாரால், 1920 வாக்கில் கடத்தி வரப்பட்டது.

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........