Tuesday, July 21, 2015

தேவயாணி கோபர்கேடேயின் பித்தலாட்டம்...........

நமது நாட்டிலே எல்லோருமே எப்படியாவது அரசாங்க உத்தியோகத்தை பெற்று விடவேண்டுமென்று துடியாய் துடிக்கிறார்கள். காரணம்,  வேலை பெற்றுவிட்டால்  ரிடையர் ஆகும் வரை எந்த கொம்பனாலும், என்ன ஊழல் செய்தாலும், வேலையை விட்டு தூக்க முடியாது.லஞ்சம் அது  இது என்று மாட்டிக்கொண்டாலும், லஞ்சம் வாங்கிய தொகையில்  10 லிருந்து 25 சதம் செலவழித்தால் போதும்  கேசு முடிந்துவிடும்!!!!!!.  சஸ்பண்டான காலத்து சம்பளத்தையும்  சொளையா வாங்கிக்கொள்ளலாம், இன்னும் இத்தியாதியான வசதிகள், வாய்ப்புக்கள்.


அதிலும் குரூப் 1 படித்தவர்கள்,  அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் தூதரகங்களில் வேலை பார்க்கின்றவர்கள் அடிக்கின்ற லூட்டிக்கு அளவே இல்லை. இங்கே அவர்களைப்போல் தூக்கினாற்போல் இல்லாமல், பல்வேறு சிரமங்களுக்கும் முயற்சிகளுக்கும்  பின்னால் வெளிநாடு வந்து,  அங்கும் ஒட்டாமல் இங்கும் ஒட்டாமல்  திரிசங்கு சொர்க்க வாழ்கை வாழ்ந்து, வாயை கட்டி வயிற்றை கட்டி சம்பாதிக்கின்ற அனைத்தையும் ஊருக்கு அனுப்பி   (அந்நிய செலாவணி யின் காம தேனு  இவர்கள் தான் )  வைத்து  இவர்கள, என்ன சேவைக்கென்று தூதரகம்  சென்றாலும் வாங்குகின்ற கட்டணத்தாலும், நத்துகின்ற முறையாலும், படுத்துகின்ற பாடு கொஞ்சநஞ்சமல்ல.


ஒருமுறை நான்,  87, 90 களில்  என்று ஞாபகம், சவுதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த  போது,   1500, 2000 இந்தியர்  வேலை பார்த்த கம்பனியில், சொல்லி அழைத்து சென்ற  வேலை கொடுக்காதது, பேசிய சம்பளம் கொடுக்காமை, தங்குமிட பிரச்சனை, இதுபோன்ற  இன்னும் பல காரணங்களுக்காக  ஒன்றரை இரண்டாண்டுகள் ஊமையாய்  போராடிய தொழிலாளர்கள்,  உதவி  வேண்டி தூதரகத்தை  அணுகிய போது,  பலமுறை  அலைக்கழிக்கப்பட்டு கடைசியாக இந்திய  தூதரை சந்தித்தனர்,  அவர் எல்லா தொழிலாளிகளையும் ஒற்று கூட்டி பேச்சுவார்த்தை நடத்த போவதாக   சொல்லி  கூட்டம் கூட்டினார் . அக்கூட்டத்தில்  பேசிய இந்திய தூதர்,  நம் நாட்டில் உள்ள வேலை இன்மை, வறுமை போன்றவைகளை சுட்டிக்காட்டி, கம்பனிகாரனுக்கு சாதகமாக, கம்பனியுடன் தகராறு செய்யாமல் ஒத்து போகும்படி  அறிவுரை வழங்கினார்.  கூட்டத்தில் இருந்த வடநாட்டு இளைஞர் சிலர் எழுந்து கோரசாக இந்திய தூதரை நோக்கி

      சச்சா எத்தனை சூட் கேஸ்  வாங்கினீர் ? 

 என்பதாக கேட்டார்கள்.

 இவர்கள் இந்திய பிரஜைகளுக்கு உதவுகின்ற லச்சணம் இதுதான்


அமேரிக்கா  போன்ற மேல்நாடுகளில், மேல்தட்டு மக்களின் ஸ்டேடஸ் சிம்பலாக கருதப்படுகிற,  gouchi , loui  vutton போன்ற பெயர்பெற்ற கம்பனிகளின் பெல்ட், பேக் போன்றவற்றின்  "  நாக் அவுட் " என்று சொல்லப்படுகிற  போலி யான சரக்குகள்,   சட்டத்திற்கு புறம்பான  முறையில்  சீனாவில்   தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வகையான " நாக் அவுட் " சமாசாரங்களின் வருடாந்தர மதிப்பு சில நூறு பில்லியன் டாலர்கள்.  அந்தந்த பிராண்ட் உரிமையாளர்கள் இதனை தடுக்க வென்று  வழக்கு தொடர ,  அமெரிக்க அரசு யார் அனுப்புவது ?,  யார்  தயாரிப்பது ?  என்று விசாரிக்கும்  போது,  சீனா  எங்களுக்கு  தெரியாது என்று சொல்லி, தகவல் தர மறுத்து வருகிறது.  அரசுக்கு தெரியாமல், சுங்கத்துறை அறியாமல் இது நடக்க முடியுமா ?. அத்துனை வருமானமும்  நேரிடையாகவும்  மறைமுகமாகவும் வரப்போவது சீனாவிற்குத்தான். ஆகையால் சீன அரசே தன ஏற்றுமதியாளர்களை  காட்டி கொடுக்காமல். முழுக்க முழுக்க பாதுகாப்பு தருகிறது.


எந்த நாட்டிலே இருந்தாலும்,எத்தனை காலம் இருந்தாலும் இந்தியர்கள் தான் பிறக்காத  வேற்று மண்ணை தன சொந்த மண்ணாக எண்ணப்போவதே இல்லை. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, அவர்கள் வாழுகின்ற நாடுகளில்  ரிடையர் ஆகும் காலத்தில் பண  உதவி  பெற்றுக்கொள்ள   சோசியல் செக்குரிட்டி என்ற   முறையை ஏற்படுத்தி  இருக்கிறார்கள்,  அதனால்  வயதான காலத்தில் கவலையில்லை.  இவர்களெல்லாம்  தன உபரி வருமானத்தை எல்லாம் இந்தியாவிற்கு தானே அனுப்ப போகிறார்கள், அனுப்புகிறார்கள்.  அவர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி யாருக்கு பயன்பட போகிறது ?.  NRI  என்று சொல்லப்படுகிற  இவர்கள் போன்றவர்களின்  வருமானத்தின்  ஒரு சிறு துளியாவது தூதரக அதிகாரிகளின்  சம்பளத்தின் பகுதியாக ஆகாதா ?  இவர்களுக்கு எவ்வகையிலேனும்  உதவ,  சேவை  தர வேண்டும் என்ற மனப்பான்மை  வரமறுக்கிறதோ  தெரியவில்லை. தனக்கென்று சட்டத்தை வளைக்கும் இவர்கள், NRI  களுக்கு சலுகைகள் செய்தால் யாருக்கு நஷ்டம் வரப்போகிறது. இந்தியாவில்  நடக்கின்ற நிகழ்சிகளால்  உலக அரங்கில் இந்தியாவிற்கு இருக்கின்ற மதிப்பு  சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை,  இவர்கள்களின் கெடுபிடிகளால்,  NRI  களின்  மத்தியில் இவர்களுக்கு  நற்பெயர்  என்பதே கிடையாது,  இதனால் தான்  இவர்களுக்கென்று  பிரச்சனைகள் வரும்போது   தார்மீக ஆதரவு  தரக்கூட  யாரும் தயாரில்லை.  இந்தியர் மனநிலையும், சீனர்  மன நிலையையும் ஒப்பிட்டு  பாருங்கள். இவ்வதிகாரிகளின் மோசமான  செயல் பாடுகளுக்கு   சான்றாக மீண்டும் வந்திருக்கும்  தேவயாணி என்பவரின் செய்தியை பாருங்கள்.


தேவயாணி கோபர்கடே என்ற வெளியுறவு அதிகாரியை பற்றி அறிமுக படுத்த  தேவையே இல்லை,  இவரது  கைதால் இந்திய தேசத்தின் மானமே  போய் விட்டதாய், இந்திய தேசமே  அல்லோகலப்பட்டு செய்திகள் வந்ததன்  விளைவாய்  அவர் பற்றி அறியாதவர்கள்  இருக்கவே வாய்ப்பில்லை.


அந்நிய மண்ணில்  இந்திய பிரஜையின் உரிமையை, பாதுகாப்பை  நிலை  நிறுத்த  வேண்டிய, ஒரு இந்திய தூதரக அதிகாரி, பப்ளிக் சர்வண்ட் ஆன  ஒருவர்,  ஒரு இந்தியரை கொத்தடிமை போல் நடத்தி கொடுமை படுத்தியது  மட்டுமின்றி, தன சுய நலனுக்காக,  இந்திய தேசத்தின் பிரதிநிதியாக செயல் பட்ட ஒரு உயர்நிலை அதிகாரி,  பொய்யான  சத்திய பிரமான பத்திரங்களில் கையொப்ப மிட்டு கொடுத்து  இந்திய  நாட்டின் மானத்தை கப்பலேற  வைத்தவரை,  அவ்விசயத்தியே  கண்டு கொள்ளாமல், இருட்டடிப்பு  செய்து,  தன எல்லைக்குள் வந்துவிட்டால், இந்நாட்டு மக்கள் போல்,  என்நாட்டு மக்களுக்கும்,  உரிமையும்  மரியாதையும் பாதுகாப்பும் தருகிற பெருந்தன்மையும், மனித நேயமும் கொண்ட அமெரிக்காவை, நிந்தித்தவர்கள்  அல்லவா    தேச பிதாக்கள்  என்று சொல்லி  கொள்ளும் அரசியல் அடிப்பொடிகளும் ,  முதுகெலும்பற்ற பத்திரிகையாலர்களும !!!.   சிறுபிராயத்தில் பள்ளிப்பிள்ளைகள்  ஏட்டிக்குப்போட்டியாய்  சண்டைகள் போட்டுக்கொள்வது போல், எமதரிகாரியை  கைது  செய்தாயா  ? , ன வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசி, அமரிக்க தூதரகங்களின் பாதுகாப்பு  ஏற்பாடுகளை தளர்த்தி தன்னை தானே கேலிக்குரியவர்களாய் ஆக்கிக்கொண்டனர்   சிறுமதியாளர்கள் .    அமெரிக்க விமான நிலையங்களில் இந்திய  VIP  கள் அவமானப்படுத்த பட்ட போது இந்த காரியத்தை செய்திருந்தாலாவது  கௌரவமாக இருந்திருக்கும்,  அந்த நேரத்தில்  செய்திருந்தால் நமக்கும் சுய மரியாதை, முதுகெலும்பு  இத்யாதிகளெல்லாம் உண்டென்று பறை சாற்றி  பெருமை பட்டுக்கொண்டிருக்கலாம்.


தேவயாணி  நிகழ்ச்சி சம்மந்தமான தொடர் விசாரணைக்கும், ஆய்வுக்கும் பிறகு தகவல்கள் வந்திருக்கின்றன, அமெரிக்காவில் இருந்தல்ல நண்பர்களே !!!  நம்மவர்களின் தகவல் தான்.. ஆ ஊ  வென்று முழங்கியவர்கள்  என்ன சொல்லப்போகிறார்கள் ?,   கீழே பாருங்கள்  செய்தியை

 புதுடில்லி: அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரியாக பணிபுரிந்த தேவயானி கோப்ரகாடே, அரசின் விதிகளை வேண்டுமென்றே மீறி அவருடைய குழந்தைகளுக்கு இந்தியா மற்றும் அமெரிக்க பாஸ்போர்ட்களைப் பெற்றுள்ளார்.; இதனால் அவருடைய நேர்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


2013ல் அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரியாக இருந்த தேவயானி, அவருடைய வேலை செய்த பணிப்பெண் சங்கீதாவுக்கு விசா மற்றும் சம்பளம் வழங்குவதில் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கடுமையான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.

வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை. தேவயானியின் குழந்தகளுக்கான இந்திய பாஸ்போர்ட்கள் செல்லாதென, கடந்த டிசம்பரில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தேவயானி குழந்தைகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டில்லி ஐகோர்ட் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலாக தாக்கல் செய்த மனுவில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.

அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: குழந்தைகளுக்கு இரண்டு பாஸ்போர்ட்கள் வைத்திருப்பது தேவயானியின் நேர்மை குறித்து சந்தேகத்தை எழுப்பி உள்ளது. அவருடைய குழந்தைகளுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருக்கும் தகவலை வெளியுறவுத் துறையிடம் அவர் மறைத்திருக்கிறார்.

இந்திய அரசின் விதிகளையும் நடைமுறைகளையும் தெரிந்தே, வேண்டுமென்றே அவர் மீறியிருப்பதால் அவருடைய செயலுக்குரிய பின் விளைவை அவர் சந்தித்தே ஆக வேண்டும். அமெரிக்க பாஸ்போர்ட் பெற்ற அந்த நிமிடத்திலேயே அந்த குழந்தைகள், இந்திய பிரஜைகள் என்ற தகுதியை இழந்து விட்டனர்.

இத்தகைய செயல்களால் இந்திய அரசை தேவயானி ஏமாற்றி விட்டார். இந்திய வெளியுறவுத் துறை சேவைக்கான நடத்தை மற்றும் ஒழுங்கு விதிகளையும் மீறியுள்ளார்.

16 ஆண்டுகள் பாஸ்போர்ட் பிரிவில் பணியாற்றிய இந்த வெளியுறவுத்துறை அதிகாரி, வேண்டுமென்றே இந்த தக.வலை ( இரண்டு பாஸ்போர்ட்கள்) மறைத்துள்ளார். இவருடைய இந்த செயல் அமைச்சகத்துக்கு கடுமையான கவலையை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகளின் விசாவுக்கு பதிலாகவே அமெரிக்க பாஸ்போர்ட்களைப் பெற்றதாக தேவயானி வாதிட்டுள்ளார். அதை அமைச்சரகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. அமெரிக்க விசா பெறுவதில் சிரமம் இருந்திருந்தால் அதை அமைச்சகத்திடம் அவர் தெரிவித்திருக்க வேண்டும்; மாறாக நேர்மையற்ற வழியில் செயல்பட்டதால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு பதில் மனுவில் குறிப்படப்பட்டுள்ளது.
தினமலர் செய்தி ஜூலை 21 2015



தினமலர் செய்தி ஜூலை 21 2015




இவ்வளவு  பொய்யும் புரட்டும், பித்தலாட்டமும்  இவ்வளவு கல்விகற்றும் போக வில்லையே.  இவர்கள் வகிக்கின்ற உயர்ந்த பதவியின் காரணமாக வரக்கூடிய  சுயமரியாதை, கௌரவம், கண்ணியம் என்பதெல்லாம் கிடையாதா ?. செய்வதையும் செய்து விட்டு கோர்ட்டுக்கும் போகத்துணியும் இவர்களை  எந்த இனத்தில் சேர்ப்பது, என்ன செய்ய வேண்டும் !!!!!!


இறைவா  இந்த மாதிரியான  பிணம்தின்னிகளின் வாய் மாய்மாலங்களை  விளங்கிக்கொள்ளும் அறிவை  எம் போன்ற பாமர ஜனங்களுக்கு தருவாயாக  சர்வ சக்தியுள்ள பரம் பொருளே   என்று வேண்டுவதை தவிர  வேறொன்றும் எனக்கு தோன்றவில்லை  



1 comment:

  1. சர்வ சக்தியுள்ள பரம் பொருளே என்று வேண்டுவதை தவிர வேறொன்றும் எனக்கும் தோன்றவில்லை! நண்பரே!
    தங்கள் தளத்தை குழலின்னிசைக்கு அறிமுகம் செய்த்து கொண்டமைக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........