Saturday, October 24, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் -பகுதி 9

பங்குகள் வாங்கும் போது  நீண்ட காலத்திற்காக வாங்க வேண்டும் என்பதாக பார்த்துக்கொண்டிருந்தோம். நண்பர்கள்,  உற்றார் , உறவினர்களுடன்  இது பற்றி பேசினோமானால் உடனடியாக பல சோகக்கதைகள் சொல்லப்படும்.  அவை முற்றிலும் உண்மையில்லை என்றும்  சொல்ல முடியாது.   பலபேர் சொல்வது உண்மைதான்.  இன்னும் நீங்கள் உறுதியாக நான் ஷேர் வாங்கத்தான் போகிறேன் என்று நின்றால்,  அடுத்து  கிடைக்கும்  அறிவுரை மியூச்சுவல் பண்டுகல் இருக்கின்றன அவற்றில் முதலீடுகள் செய்யுங்கள் என்பதாக இருக்கும்.  இன்னும் சிலர்  E T F  இருக்கின்றன  அவற்றில்  முதலீடு செய்யுங்கள் என்பதாக சொல்வார்கள்.

எந்த தொழில் யார் செய்தாலும் லாபத்திற்காக தான் செய்வார்கள்,  இதற்கு  மியுச்சுவல் பண்டுகளோ,  E T F  களோ விதி விலக்கு அல்ல.  அவர்களிடம்  வேலை பார்க்கும் விலைஉயர்ந்த கோட் சூட் போடும்  நிதி நிறுவன அதிகாரிகளின் சம்பளம், அவர்கள் அமரும் மிக நேர்த்தியாக  வடிவமைக்கப்பட்ட  குளு குளு  அறைகள்,  இவைகளுக்கு யார் செலவு செய்வது, அந்த பணம் எங்கிருந்து வரும் ?. இதற்கெல்லாம் மேலாக  அவர்களுக்கு வேலை கொடுக்கும் கம்பனி லாபம் பார்க்க வேண்டும்.  உங்களுக்கு வருடம் ஒருமுறைதான் பெரும்பாலும் டிவிடன்ட் கிடைக்கும், அவர்களது செலவுகள் மாதாமாதம் இருக்கும்,  கம்பனிகள்  அந்த செலவுகளுக்கு எங்கு போகும் ?.   உண்மை என்ன வென்றால் நீங்களும் நானும் போடும் பணத்தில் இருந்து சம்பாதித்து,  இந்த செலவுகளெல்லாம் போக மீதம் இருக்கும் தொகையை தான் நமக்கென்று, டிவிடண்டாக தருவார்கள்.  சிலவருடங்களில் செலவு போக மீதம் இருக்காது, நமக்கு ஒன்றும் கிடைக்காது,   ஆனால்  அவர்களுக்கு  வழக்கம் போல் எல்லாமே கிடைக்கும். முதல் போட்ட நமக்கு  வாயில் லாலிபாப்  தான். நாம் நம் பணத்தை அவர்களிடம் கொடுத்து எனக்குக்காக தொழில் செய்து சம்பாதித்து தாருங்கள் என்று சொன்னால், அப்படித்தான் நடக்கும் !!!!!!  தனக்கு போகத்தான் நமக்கு அவர்களை குறை சொல்ல முடியாது.  நீங்கலாயினும், நானானாலும் இதையே செய்வோம். இவற்றை ப்பற்றி  எழுதுவதன் நோக்கமே,  நம் பணத்தை நாமே முதலீடு செய்து, முடிந்த அளவு கூடுதல் லாபத்தை நாமே அடைந்து கொள்வது என்பதற்கு த்தான்

இவர்களால் நமக்கு நன்மையே இல்லையா என்றால்,  நிறைய நன்மை இருக்கிறது,  இவர்களிடம் நம்மைப்போன்றோரின் பெரும் தொகை கைவசம் இருப்பதால் சந்தையின், அன்றாட ஏற்ற தாழ்வுகளை இவர்களால் இயக்க முடிகிறது,  அப்பப்ப  இவர்களை போன்றவர்கள், பொருளாதார நிகழ்வுகளை கணிக்க முயன்று கொடுக்கும், டிப்புக்களால்  பங்கு விற்றல் வாங்கல் நடந்து, நம்மைப்போன்றவர்கள் வாங்குதற்கு வாய்ப்புக்கள் உருவாகும்.  சாதரணமாக எல்லோருக்கும் தெரியும்  ஒரு விஷயம்,  எல்லா தொழிலும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை,  உதாரணத்திற்கு  காய்கறி சந்தையில், ஒருசில காய்கறிகளின் வரத்து கூடுதல் ஆகும் போது விலை இறங்குவதும், வரத்து குறையும் போது விலை கூடுவது போல.  ஒரே நேரத்தில் எல்லா காய்கறிகளின் விலையும்  கூடுவதோ குறைவதோ சாதரணமாக  இருக்காது.  அதே போல் தான் வெவ்வேறு தொழில் துறையும்  ஓரோர் சமயத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும்,  இதன் காரணமாக லாப நட்டங்கள் ஏற்படலாம். அதனால் ஷேர் விலைகள் ஏறி இறங்கும்,  அவற்றின் தாக்கங்கல்,  நாம்  தாங்கும் அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக, வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்ய பரிந்துரை செய்வார்கள்.  நம் போன்றோர் மிக குறைந்த முதலீட்டில்  ஆரம்பிப்பதால் அப்படி செய்ய இயலாது,. அவசியமும் இல்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்பவர்கள் அப்படி செய்யலாம்.  கம்பனிகள் ஆரம்பித்தவர்கள் எல்லாம், அதிலேயே  சம்பாதித்து நன்கு வளர்ந்த பின்னால் தான் வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்,   இந்திய சந்தையில் பணம் பண்ணிய பெரும்பாலான கோடீஸ்வரர்கள் ஒரு கம்பனியில் முதலீடு செய்தே சம்பாதித்து இருக்கிறார்கள். நம்மை போன்றோர்  முதலீடு செய்த கம்பனியின் ஷேர்கள்  இரங்கி வரும் போது இன்னும் கூடுதலாக வாங்க வேண்டும்.

மியுச்சுவல் பண்டில், E T F  இல் முதலீடு செய்ய சொல்பவர்கள்,  ஒரு விஷயத்தை கவனித்து இருக்கிறார்களா என்பது தெரிய வில்லை.  நாம் முதலீடு செய்யப்போகும் கம்பனிகளும்,  அவர்கள் முதலீடு  செய்திருக்கும் கம்பனிகளில் தான்.  அவர்களால் லாபம் சம்பாதிக்க முடியும் போது நம்மால் என் முடியாது ?.  சில வரை முறைகளை நாமும் நமக்கென வகுத்துக்கொண்டு அதன் படி செயல் பட்டால் நம்மாலும்,  சம்பாதிக்க இயலும்.  இந்திய சந்தைகளில்  சில ஆயிரம் கம்பனிகள் தான்,  பல் வேறு  எக்செஞ்சுகளில் லிஸ்ட் செய்யப்பட்டு,  வியாபாரம் செய்யப்படுகிறது.  இவைகளில் இருந்து தான் அவர்களும்  தேர்வு செய்து முதலீடு செய்கிறார்கள்.  நூற்றுக்கணக்கான  மியுச்சுவல்  பண்டுகலும்,  E T F  களும் இருக்கின்றன,  அவற்றில் சில வற்றை எடுத்துக்கொண்டு,   எந்தெந்த கம்பனிகளில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களானால்,   பெரும்பாலான கம்பனிகளில் எல்லோருமே முதலீடு செய்திருப்பார்கள் !!!!!.   

இந்த தொடரை  தொடந்து வருபவர்களுக்கு,  நீண்ட கால முதலீட்டினால் மட்டுமே பங்கு சந்தைகளில் சம்பாதிக்க முடியும் என்பது போன்ற ஒரு எண்ணத்தை உருவாக்கி இருக்கும்.  பலர்  ட்ரேடிங் செய்து சம்பாதிப்பதையும், டிரைனிங் தருவதாகவும் விளம்பரம் செய்வதையும் பார்த்திருக்கலாம். இன்னும் சிலர் குறைந்த விலையில் வாங்கி, விலை ஏறியதும் விற்று  சம்பாதித்ததாக கூறுவதையும் படித்திருப்பீர்கள்.  பெரும்பாலோர்  கமிசனை பற்றி சொல்லி கணக்கிட்டு இருக்க மாட்டார்கள். கிடைத்த லாபத்தை மட்டுமே சொல்லி இருப்பார்கள், அந்த லாபம் அடைய செய்த செலவை சொல்ல மாட்டார்கள். சம்பாதிக்கவே முடியாது என்பதல்ல, அதற்க்கு  சில  அடிப்படை கணக்கீடுகள் செய்து  முயற்சி செய்ய வேண்டும்.  அதுவும் இன்று வாங்கி நாளை விற்பதால்  அல்ல !!!!.  அதற்கு நமக்கு மிகுந்த அனுபவம் வேண்டும்,  சந்தையின் போக்கை சிறிது காலம் கவனித்து, புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய முதல் நோக்கம் லாபம் சம்பாதிக்காவிட்டாலும், வாயை கட்டி வயிற்ரை கட்டி சேர்த்ததை இழந்து விடக்கூடாது,  முதலை இழந்து விடா முயற்சிகளை செய்து சம்பாதித்து கொண்டு,  அடுத்த முயற்சிகளை சிறிது சிறிதாக செய்யலாம். இதற்கிடையில் சந்தை பற்றிய புரிதலும் ஏற்படும்.

இறைவன் நாடினால் தொடர்ந்து  விபரங்களை பார்ப்போம் ............  

Thursday, October 1, 2015

இதுவும் தொழில் முயற்சிதான்.............

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் படித்து  கைநிறைய சம்பளம் வாங்கும் மக்களிடத்தில் பரவலாக இருக்கும் ஒரு எண்ணம், ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்பதாக தான் இருக்கிறது.   இதற்கெல்லாம் காரணம்  கம்ப்யூடர் துரையின் அசுர வளர்ச்சி தான்.  இத்துறையில் தொழில் தொடங்க பெரிய முதலீடு வேண்டும் என்பது அவசியமில்லை,   இன்றைக்கு வளர்ந்து பெரிய ஜாம்பாவானாக நிமிர்ந்து நிற்கும் கம்பனிகலெல்லாம், பல்கலை கழகங்களின் மாணவர் தங்கும் விடுதிகளின் பொது அறைகளிலும், வீட்டு கார் கராஜ்களிலும் தொடங்கப்பட்டவைகள் தான்.  இந்த மாதிரியான கம்பனிகளின் வளர்ச்சியின்  பின்னணியில் இருப்பவர்கள் எல்லாம் 90 % க்கு மேல் இந்தியர்கள் தான், அதிலும் சிறப்பாக தென்னிந்தியர்கள் தான்.  இதில் ஒரு நல்ல சதவீதத்தினர் ஆரம்பகாலத்தில்  இருந்தே அதே கம்பனியில் இருப்பவர்கள் என்பதால், சம்பளத்துடன், வளர்ச்சி, உழைப்புக்கு ஏற்ப கம்பனியின் ஷேர் களாகவும் கொடுக்கப்படடிருப்பார்கள் ,  கம்பனி வளரும் போது, ஷேர் விலை உயர்வினால் கிடைக்கு லாபமும் இவர்களுக்கே சேரும்.  இப்படி ஒரு மறைமுக லாபம் இருப்பதால், இதுவே ஒரு காரணியாக செயல் பட்டு,  கம்பனி வளர்ச்சி தன வளர்ச்சி என்பதாக எண்ணி நேரம் கால பாராமல் உழைக்கிறார்கள்.  சாதரணமாக ஒரு மனிதன்  நாற்பது ஆண்டுகாலம் உழைத்து 65 வயதில் பனி ஓய்வு பெறுவான் என்றால்,  இவர்கள்  அதே அளவு உழைப்பை  25, 30 ஆண்டுகளுக்குள் செய்து விடுபவர்களாக இருக்கிறார்கள்.  அங்கெ இருக்கிற வாழ்க்கை முறையும், அவர்களுடைய  வேலைக்கு ஏற்ப  இணைந்து செல்லக்கூடியதாக இருக்கிறது.

இம்மாதிரியான பன்னாட்டு கம்பனிகள் இங்கு வரும்போது, வேலை செய்பவர்களிடம் அதே உழைப்பை எதிற்  பார்க்கிறார்கள்,  சம்பளம் என்னவோ கூடுதலாக இருந்தாலும் மற்ற விசயங்கள் இருப்பதில்லை,  இந்திய வாழ்க்கை முறையும், வேலைக்கு அனுசரணையாக இருப்பதில்லை,  இதன் காரண மாகத்தான்,  பத்து, பதினைந்து ஆண்டுகள் உழைத்ததுமே  வெறுத்துப்போய்,  வேறு ஏதாவது செய்து பிழைத்து கொள்வோம் என்று,   மன அழுத்தம் இல்லாத தொழிலாக  தேடி அலைந்து,  விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட தொடங்குகிறார்கள்.  வெற்றிக்கு முக்கிய காரணி திட்டமிடலும், அதன் பிரயோகமும் என்று அனுபவ ரீதியாக அறிந்து கொண்டவைகளை, கையாண்டு வெற்றியை அடைந்து கொள்கிறார்கள்.

நம்மவர்கள் இவ்வளவு உழைக்க தயாராய் இருந்தாலும்.  அவர்களுக்கு மேல் நிலையில் உள்ள மேல் நாட்டவர், சரியாக 8 மணி நேரத்திற்கு மேல் உழைப்பதில்லை, நம்மவர்களிடம்  உள்ள தொழில் பற்று அவர்களிடம் இல்லை.  இதன் காரணமாகவே இந்தியர்களுக்கு தனி மரியாதை.   இந்தியர்கள் சிறந்த அறிவாளிகள் என்பதால் இந்நிலைமை என்று யாரும்  நினைத்து விட வேண்டாம் காரணம் , சீனர்கள்  நமக்கு எந்த விதத்திலும்   சளைத்தவர்கள் அல்ல.   சீனர்கள் நம்மவர்களை என்றோ முந்தி சென்று இருப்பார்கள், செல்லாததன் காரணம், நம்மவர்களை போன்று ஆங்கில அறிவு அவர்களிடம்  இல்லாதது தான்.!!!!!!!.   இப்பொழுது தான் சீன பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தொடங்கி  இருக்கிறார்கள்.   அவர்கள் தயாராகி வரப்போகிற   15, 20 ஆண்டுகால இடைவெளிதான் நம்மவர்களுக்கு கிடைத்திருக்கிற வரப்பிரசாதம்.  நம்மை ஆள,  நாம் வைத்திருக்கிறவர்கள்,  அடிமை மொழி நமக்கு தேவையில்லை என்று சொல்ல தொடங்கினால்,  வருங்கால சந்ததியினர் நிலைமை என்ன    ஆகுமோ ?.....

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விடுமுறையிலோ, அல்லது உறவினரை சந்திக்கவோ வரும் போது, பெரு நகரங்களில் முளைத்து இருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களும்,   பெரும்  வணிக வளாகங்களில் மக்கள் பணத்தை சர்வ சாதரணமாக், ஆயிரக்கணக்கில் செலவழிப்பதை கண்டு நம்மால் கூட இப்படி தண்ணி பட்ட பாடாக செலவழிக்க முடியாதே என்று பிரமிப்புடன் பார்த்து, இன்திய வாழ்க்கை நாம் நினைப்பது போல் இல்லை போலும் மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது என்ற பிரமையை  வெளிநாடு வாழ் இந்தியர்களின் மனதில் உருவாக்குகிறது.   எத்தனை சதவீத மக்கள் இப்படி செலவழிக்கிறார்கள் என்று பார்த்தோமானால் மிகக்குறைவே,  அதிலும்  பெரும்பாலும்  I T  துறையில் இருப்பவர்களாகத்தான் இருப்பார்கள்.   எதார்த்தம்  எப்படி இருக்கிறது என்றால்,  சிலநூறு எண்ணிக்கையிலான  டீ பாய் வேலைக்கு, மூன்று லட்சம் விண்ணப்பங்கள், அதிலும்  எல்லோரும்  பட்டப்படிப்பு படித்தவர்கள், மேல் பட்டப்படிப்பு படித்தவர்கள்  இன்னும் சிலரோ  டாக்டரேட் வாங்கியவர்கள் !!!!!

இந்தியா இன்று இந்த அளவிற்கு உலகில் பேசப்படுவதற்கு காரணம்,  நம்மை இத்தனை காலம் ஆள்கிறேன் பேர்வழி என்று அரசுக்கட்டிலில் இருந்தவர்களோ, இருப்பவர்களோ அல்ல,  அவரவர் தனிப்பட்ட முறையில், முயன்று வெற்றி அடைந்ததன் காரணமாகத்தான் நாடு உயர்ந்து இருக்கிறது.  அரசுகள்  கஜானாவில் இருந்த தங்கத்தை உலக நாடுகளிடம் அடகு வைத்தபோது,  குடியிருக்க வீடில்லை, கஞ்சிக்கும் வழியில்லை என்றிருந்த நேரத்தில், இருந்ததை விற்று மக்கள், சாரி சாரியாய் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்று,  இன்னது தான் செய்வது என்றில்லாமல், எந்த வேலையும் பொருள் கிடைத்தால் போதும் என்று செய்தவர்களால் தான் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தது.  நாட்டின் எந்த மூலை  முடுக்கில்  சென்று பார்த்தாலும், யாரவது ஒருவர் அரபு நாடு சென்று வந்திருப்பார், சாட்சி சொல்ல கூடவே, கான்கிரீடால் ஆன வீடும் இருக்கும். எத்தனை  இளம் பெண்கள் மணமுடித்து கொடுக்கப்பட்டிருப்பார்கள்.  வெயிலுக்கு கூட பள்ளியில் ஒதுங்க இயலாதவர்களின் பிள்ளைகள் பல்களை கழகங்களுக்கு சென்றார்கள்.  இன்றைக்கும் அங்கு சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள்.  இன்று  மேற்கத்திய நாடுகளில் படித்த பலர் உழைக்கிறார்கள், தேச பொருளாதாரம் இப்படிப்பட்டவர்களால் தான் உயர்கிறது, உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இதில்  பரிதாபத்திற்கு உரிய விஷயம் என்ன வென்றால்,  நம் நாட்டிற்கு வந்து ஏதாவது தமக்கு தெரிந்த தொழில் செய்யலாம் என்று பார்த்தால், எதிலும் எங்கும் லஞ்சம், எந்தக்காரியமும் நினைத்த நேரத்தில் நடப்பதில்லை,  அனுமதிகளுக்கு அலைகின்ற காலத்தில், கையில் இருக்கும் பணம் கரைந்து, மீண்டும் வெளிநாடுகளுக்கே செல்லும் சூழ்நிலையும் உருவாகி விடும்,  இப்படி வாய்ப்பை இழந்தவர்கள் பலர். இன்னும் சிலர் தொழில் செய்கின்ற அளவிற்கு  முதல் இல்லாதவர்கள்,  வாழ்க்கையை வெளிநாடுகளிலேயே தொலைத்தவர்கள், வர விரும்பினாலும் வர இயலாதவர்கள். இவர்களுக்கெல்லாம் முடிவுதான் என்ன ?, வாழ்க்கை தொலைந்தது தொலைந்தது தானா ?,   

மனம் தளர விடாதீர்கள்,  உங்களுக்கு என்ன தொழில்லில் ஈடுபட வேண்டும்; எஞ்சினீரின்கா , கெமிகலா,ஷிப்பிங்கா  .....   நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.   நமக்கும் வெற்றியடைய வாய்ப்பு இருக்கிறது.

லஞ்ச லாவன்ய சூழ்நிலை இந்தியாவில் இன்றல்ல,  இந்தியாவின் பிறப்பிலேயே உருவானது போலும், இவ்வருட ஆரம்பத்தில்  காலமான 85 வயது வெற்றியாளர்  சந்திரகாந்த் சம்பத்,  இந்திய வாறன் பப்பே என்று புகழப்பட்டவர்,  தன்னை சுற்றி இருந்த இளைஞர் களுக்கு சொன்னதை கேளுங்கள்.  பயனடைந்த இளைஞர்களில்  ஒருவரும்,  பம்பை சந்தையின் பழம்பெரும் புரோக்கருமான பாரக் பாரிக் என்பவர்   சொல்கிறார் கேளுங்கள்.

என்  போன்று  இன்று பங்கு சந்தையில் ஈடுபட்டிருக்கும் பலபேருக்கு  உந்து சக்தியாக, வழிகாட்டியாக இருந்தவர் தான் திரு சம்பத் அவர்கள்.  இவர் எந்த அளவிற்கு இந்திய பங்கு சந்தைக்கு முக்கியமானவர் என்றால்,  பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின்  ஆரம்ப காலத்தில்  அதற்கு வருமானத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக,  ஒவ்வொரு கம்பனியும் லிஸ்ட் செய்யும் போது,  லிஸ்டிங் தொகை  என்று ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்கவேண்டும்.  அந்த தொகை குறிப்பிட்ட அளவினதாக இல்லாமல,   ஷேர் களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இருக்கவேண்டும் அப்பொழுது  தான், கம்பனிகள் ஒவ்வொருமுறை ஷேர் வெளியிடும் போதும் வருமானம் கிடைக்கும் என்பதாக யோசனை  சொல்லி அதன்படி மாற்றி அமைக்கப்பட்டது.   அவருடைய  பம்பாய்  வொர்லியில் உள்ள   அறையை பார்த்தால் பலவகைப்பட்ட நிதி சம்பந்தமான சஞ்சிகைகளும், புத்தகங்களும் நிறைந்து கிடக்கும்.  அவர் என்னுடைய தந்தையின் நண்பர்.  நான் என்னுடைய கல்லூரி முடித்த புதிதில்,  தற்காலங்களில் பேஸ்ட் போன்றவை வரும் பிளாஸ்டிக் டியூப் செய்வதற்கான ப்ராஜெக்ட் செய்திருந்தேன், அதனை   பொருளாதார ரீதியாக சாத்தியம்  இல்லாதது என்பதாக சொல்லி நிராகரிக்க்ப்பட்டது.  இந்த ப்ரொஜெக்டின் வெற்றி,  என்வாழ்க்கையின்  ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று எண்ணியிருந்த  எனக்கு அது  பேரிடியாக இருந்தது.  என் தந்தையார் திரு சம்பத் அவர்களை சென்று சந்திக்குமாறு சொன்னார்கள்.  என் கதையை பொறுமையாக கேட்டு ,  இன்றைக்கு இந்தியாவில் தொழில் தொடங்குவது என்பது எளிதான விசயமல்ல,  முதலில் பல தரப்பட்ட அனுமதிகள் பெறவேண்டியிருக்கும், அவைகளை பெறுவதென்பது பெரும் செல்வாக்கு உடையவர்களால் தான் முடியும்.  அடுத்து மூலப்பொருள் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை இப்படி பலவகையான பிரச்சினைகள், இவற்றை சமாளிப்பதற்கு கடுமையான செல்வாக்கும் அதற்கும் மேல் பணபலமும் வேண்டும். இவைகளை சமாளித்த பின்பு தான் புராடக்ட்டை பற்றி யோசிக்க முடியும்.

இதற்கு மாற்றாக என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது, அதற்கு நீங்கள் இன்ன தொழில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை,   மனதிற்கு பிடித்த எதை வேண்டுமானாலும் செய்யலாம்,  நாளை தொழில் சரியில்லை என்றாலோ,  பிடிக்கவில்லை என்றாலோ, மிக எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்,  மாட்டிக்கொண்டு விழி பிதுங்குதல் என்பதெல்லாம் இல்லை என்று சொன்னார்.

என்ன யோசனை சொல்லுங்கள் என்றுகேட்டதற்கு ,   புதிதாக தொழில் தொடங்குவதையும்  அதில் உள்ள உள்ள பிரச்சனைகளைகளையும்   அரசியல் ரீதியான செல்வாக்கும், பணபலமும், தாக்குபிடிக்க கூடிய திண்மையும் உள்ளவர்களிடம் விட்டு விடுங்கள்.  உங்களைப்போன்ற இளைஞர்கள்................. அவர் வார்த்தைகளிலேயே  கேளுங்களேன்.............

“Pick up good companies with good managements when their share prices are at an eight-year or 10-year low. Alternatively, if you still want to do something, buy good companies that are 40% lower than their 52-week high. I will buy only those companies that are in a business that even fools can understand, have very little debt, have free cash flows or do not have much capital expenditure, which is nothing but deferred cost,”


 What is Sampat’s secret to good investing?  comes  the answer: Invest in a business you understand, the company should have either zero or very little debt, the share should be available at a P/E ratio of 13 to 14 times the current year’s earnings and lastly, it should be available between 3.5% and 4%. “It is that simple!” he says. This is all he does; he says, no more research. Follow these golden rules, and you can be as good as he can, he concluded.

கையில் மிக குறைவான முதலீட்டுடன், ஆரம்பகாலத்தில்  ஷேவிங் ரேசர், சோப்பு அழகு சாதனங்கள் போன்றவற்றை  உற்பத்தி செய்யும், கில்லட், ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்ற கம்பனிகளிலும், சிறு உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்த நெஸ்லே போன்ற எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய, நாளாக நாளாக தேவைகள் கூடக்கூடியது என்று யாராலும் புரிந்து கொள்ளக்கூடிய தொழில்களில்  முதலீடு செய்து  வெற்றி அடைந்த தன கதையை, சிறு சிறு வார்த்தைகளில், நம்மை போன்றோருக்காக செதுக்கி தந்திருக்கிறார்.

நண்பர்களே,  சிந்தியுங்கள்........ சரி எனப்பட்டால் முயற்சி செய்யுங்களேன் !!!!!!   Please make something happen  

தொழில், முதலீடு,அரபு நாடுகள்,