Monday, March 24, 2014

வாத்தியாரை தெரியுமா ?...


 அதிரையின் பிலாக்குகளிள் பேசப்படாத ஒரு மனிதர். முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நம் அதிரை கல்லூரியிலோ அல்லது பள்ளியிலோ படித்தவர்களுக்கு தெரிய வாய்ப்புண்டு. இன்னும் சொல்லப்போனால் புதுதெருவிலுள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.

   சரி யார் அவர், சிலம்பவாத்தியாரா?.. குத்து சண்டை ஆசிரியரா?..இல்லை நம்  கா மு கல்லுர்ரி அல்லது பள்ளி ஆசிரியரா? எதுவும் இல்லை சாதாரண கல்லூரி பியூன். பிறகு எப்படி வாத்தியார் என்ற பெயர் வந்தது. அது ஒர் வாழ்ந்து அழிந்து அதிரையில் ஒதுங்கிய மனிதனின் கதை   மதுரை அருகில் சில     
ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரான நிலக்கிழார், "எட்டு வேட்டி" இப்ராஹிம்ஷா. அவரது மகனார், இரு குழந்தைகளுக்கு தந்தையான, மனைவியை இழந்த, இளைஞ்ர் செய்யிது இபுறாஹிம். மனமெல்லாம் கனவுகளுடன், சொத்துக்களுடன் சொந்தஙகளையும் துறந்து, கிராமத்தை வெறுத்து தன்னை உயர்த்திக்கொள்ள பெருநகர் தேடி பயணமானார். அவர் கண்களுக்கு மான்செஸ்டராய் தெரிந்தது காரைக்குடி. வாய்ப்புக்கள் மட்டுமின்றி, காரைக்குடியிலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள கோட்டையூரில் தாயை இழந்த தன் இரு மக்களும் மாமன் வீட்டில் வளர்ந்து வந்ததும்  காரண்மாக இருக்கலாம். அழகப்பா கல்லூரி இருந்த காரணத்தால் அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்று இருந்தது காரைக்குடி. கல்லூரி வளாகத்தில் இருந்து 3 கல் தூரத்தில் உள்ள ஊர் தான் கோட்டையூர். நகரத்தர்ர் என அழைக்கப்படுகிற நாட்டுக்கோட்டை செட்டியார்களும்,  றாவுத்தர் என்று அழைக்கபடுகிற
முஸ்லிம்களும் நெருக்கமாக இருந்த காலம். சிறுக, சிறுக அவ்வூரை சுற்றி கிடைத்த கட்டிட பணிகளிள் அனுபவம் பெற்று கட்டிட கான்ட்ராக்டர் ஆனார் செய்யிது இபுராஹிம். கைகளிள் காசு புழங்க ஆரம்பிததும் சேரும் மனிதர் கூட்டமும்  சேர்ந்தது, அப்படித்தான் அழகப்பா கல்லுரியை சேர்ந்த ஒரு எஞ்சினியரும் நண்பரானார். நண்பராகவும், கட்டிடத்தொழில் சமந்தப்பட்ட விசயங்களிலும் உதவியாய் இருந்த காரணத்தால், இருவரும் நாளடைவில் பணம், காசுகளை எழுத்து, கிறுக்கல் ஏதுமின்றி கொடுத்துவைக்கும் அளவிற்கு மிகவும் நெருக்கமானார்கள். பெரிய கான்ட்ராக்ட் ஒன்று கிடைத்தது, தன் ஊருக்கு சென்று கணிசமான அளவு நிலங்களை கோஆபரேடிவ் பேங்கில் அடகுவைத்து பணம் புரட்டிக்கொண்டு வந்தார் செய்யிது இபுராஹிம். அக்காலத்தில் நகரத்தார்களிடயே மிகவும் புகழ் பெற்றவர் ராஜா சர். முத்தையா செட்டியார், அவருடைய ப்ங்களா, காரைக்குடிக்கு அருகில் கானாடுகாத்தான் என்ற ஊரில் இருக்கிற்து, இன்றும் அந்த பங்களா அரண்மனை என்றே அழைக்கப்படுகிறது, அவருடைய அரண்மனையில் ஹலிகாப்ட்ர் இறஙக ஓடுதளம் அமைத்தது நம்ம செய்யிது இபுராஹிம் வாத்தியார் தான்.
   காலங்கள் ஓடியது, செய்யிது இபுராஹிமின் தொழிலும் சிறந்தது. நல்ல ஒரு நாளிள் அவரின் எஞ்சினியர் நண்பர் கொடுத்து வைத்திருந்த பணம் சில ஆயிரங்களை தரவேயில்லை என்று சொல்லிவிட்டார். எவ்வளவோ முயற்சி செய்தும் பணம் கிடைக்கும் வ்ழியை கணோம். பேங்கில் இருந்து ஜப்தி நோட்டிஸ், ஊரில் இருந்து ஓடினால் தான் சொத்து தப்பிக்கும் என்ற அனுமானத்தில் ஊரை விட்டு ஓடி வந்து மறைந்து வாழ நினத்த ஊர் அணைக்காடு.
    சாப்பிட வேண்டும்,வாடகை கொடுக்க வேண்டும், என்ன தொழில் செய்வது?. செய்வதறியாது திகைத்தார், வசதியான குடும்பத்தில் பிறந்திருந்த காரணத்தால் கிடைத்திருந்த கல்வியை உபயோகிக்கும் எண்ணம் வந்தது. அன்று தான் அணைக்காட்டில் பிறந்தது தின்னைப்பள்ளிக்கூடம் அதன் பிற்குதான் செய்யிது இபுறாஹிம் றாவுத்தர் வாத்தியார் ஆனார். சில காலங்களுக்கு பிறகு அதிரை வந்தார். புதுத்தெருவில் குடியேறி டியுசன் சொல்லிக்கொடுத்து வாத்தியாராய் பெயர்பெற்றார். வ்ருமானம் போதவில்லை, முதலில் கா. மு.பள்ளியிலும் பிறகு கா.மு. கல்லூரியிலும் பியூனாக பணியாற்றினார்.
    அக்காலத்தில் நம் கா.மு. பள்ளியும், கல்லூரியும் கொட்டகைகளாக இருந்தன.வ்ருமானம் குறைவாக இருந்ததால் நிர்வாகம் திணறிக்கொண்டிருந்த காலம். காரைக்குடி அழகப்ப செட்டியார், பள்ளிக்கூடங்களுக்கு பொருலுதவி செய்கிறார் என்ற் விசயத்தை தாளாளர் ஹாஜி ஷைக் ஜலாலுதீன் அவர்களிடம் வாத்தியார் சொல்லி, அவர்கள் அனுமதியுடன் ஒரு சிறிய குழுவினருடன் காரைக்குடி சென்றார். குழுவினரை ச்ந்தித்த செட்டியார், மாடி கட்டிடம் கட்டித்தருவதாகவும், அதற்கு பதிலாக கா.மு பள்ளி என்னும் போர்டுக்குமேல் சிறியதாகவேனும் "அழகப்பா உபயம்" என்று எழுத வேண்டும்  என்றாறாம். தாளாளர் அதற்கு ஒத்துக்கொள்ளாததால் அவர் உதவியுடன் கட்டிடம் கட்டப்படாமலேயே போய்விட்டது.
    வாத்தியாரின் கடந்த கால வாழ்கையை அறிந்த புரபசர்கள்.திருவாளர்கள், ஜயராஜ், அப்துல் கபூர், தாளாளர், மற்றும் புதுத்தெரு வாசிகளும் மிகவும் கண்ணியத்துடன் நடத்தியிருக்கின்ற்னர். தன் கடைசி காலத்தில் சொத்துக்களை மீட்டு வாரிசுகளுக்கு கொடுக்க நினைத்தாறோ என்னவோ, சென்ற இடத்தில் சொந்த ஊரிலேயே வபாத்தாகி விட்டார். இன்னாலில்லாகி வ இன்னா இலைகி ராஜிவூன்.  

Saturday, March 22, 2014

என் ஏக்கங்கள்.....

அஸ்ஸலாமு அலைக்கும்
              அல்லாஹ் எனக்கு மிகப்பெரும் கிருபை செய்திருக்கிறான். இவ்வளவு நாளும் அவனுடைய உபகாரஙகளை பெற்றுக்கொண்டு சுயனலத்துடன் இருந்திருக்கிறேன் என்று எண்ணும்போது மிகவும் வெட்கமாக இருக்கிறது. இப்பொழுதாவது நான் உணர உதவி செய்தான் அல்ஹம்துலிலாஹ் 

             பல விசயங்கள் பற்றிய என் எண்ணங்களை உஙகளிடம் பகின்று கொள்ள ஆசைப்படுகிறேன். நான் பட்ட, மற்றவர்கள் பட்டு எனக்கு சொன்ன விசயங்களை சொல்வேன்.பல விசயங்கள் உஙகளுக்கு உடன்பாடு அற்றதாய் இருக்கலாம். உஙகள் கருத்துக்களை சொல்லுஙகள்.

விரைவில் தொடர்வொம்..... வஸ்ஸலாம்