Saturday, October 24, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் -பகுதி 9

பங்குகள் வாங்கும் போது  நீண்ட காலத்திற்காக வாங்க வேண்டும் என்பதாக பார்த்துக்கொண்டிருந்தோம். நண்பர்கள்,  உற்றார் , உறவினர்களுடன்  இது பற்றி பேசினோமானால் உடனடியாக பல சோகக்கதைகள் சொல்லப்படும்.  அவை முற்றிலும் உண்மையில்லை என்றும்  சொல்ல முடியாது.   பலபேர் சொல்வது உண்மைதான்.  இன்னும் நீங்கள் உறுதியாக நான் ஷேர் வாங்கத்தான் போகிறேன் என்று நின்றால்,  அடுத்து  கிடைக்கும்  அறிவுரை மியூச்சுவல் பண்டுகல் இருக்கின்றன அவற்றில் முதலீடுகள் செய்யுங்கள் என்பதாக இருக்கும்.  இன்னும் சிலர்  E T F  இருக்கின்றன  அவற்றில்  முதலீடு செய்யுங்கள் என்பதாக சொல்வார்கள்.

எந்த தொழில் யார் செய்தாலும் லாபத்திற்காக தான் செய்வார்கள்,  இதற்கு  மியுச்சுவல் பண்டுகளோ,  E T F  களோ விதி விலக்கு அல்ல.  அவர்களிடம்  வேலை பார்க்கும் விலைஉயர்ந்த கோட் சூட் போடும்  நிதி நிறுவன அதிகாரிகளின் சம்பளம், அவர்கள் அமரும் மிக நேர்த்தியாக  வடிவமைக்கப்பட்ட  குளு குளு  அறைகள்,  இவைகளுக்கு யார் செலவு செய்வது, அந்த பணம் எங்கிருந்து வரும் ?. இதற்கெல்லாம் மேலாக  அவர்களுக்கு வேலை கொடுக்கும் கம்பனி லாபம் பார்க்க வேண்டும்.  உங்களுக்கு வருடம் ஒருமுறைதான் பெரும்பாலும் டிவிடன்ட் கிடைக்கும், அவர்களது செலவுகள் மாதாமாதம் இருக்கும்,  கம்பனிகள்  அந்த செலவுகளுக்கு எங்கு போகும் ?.   உண்மை என்ன வென்றால் நீங்களும் நானும் போடும் பணத்தில் இருந்து சம்பாதித்து,  இந்த செலவுகளெல்லாம் போக மீதம் இருக்கும் தொகையை தான் நமக்கென்று, டிவிடண்டாக தருவார்கள்.  சிலவருடங்களில் செலவு போக மீதம் இருக்காது, நமக்கு ஒன்றும் கிடைக்காது,   ஆனால்  அவர்களுக்கு  வழக்கம் போல் எல்லாமே கிடைக்கும். முதல் போட்ட நமக்கு  வாயில் லாலிபாப்  தான். நாம் நம் பணத்தை அவர்களிடம் கொடுத்து எனக்குக்காக தொழில் செய்து சம்பாதித்து தாருங்கள் என்று சொன்னால், அப்படித்தான் நடக்கும் !!!!!!  தனக்கு போகத்தான் நமக்கு அவர்களை குறை சொல்ல முடியாது.  நீங்கலாயினும், நானானாலும் இதையே செய்வோம். இவற்றை ப்பற்றி  எழுதுவதன் நோக்கமே,  நம் பணத்தை நாமே முதலீடு செய்து, முடிந்த அளவு கூடுதல் லாபத்தை நாமே அடைந்து கொள்வது என்பதற்கு த்தான்

இவர்களால் நமக்கு நன்மையே இல்லையா என்றால்,  நிறைய நன்மை இருக்கிறது,  இவர்களிடம் நம்மைப்போன்றோரின் பெரும் தொகை கைவசம் இருப்பதால் சந்தையின், அன்றாட ஏற்ற தாழ்வுகளை இவர்களால் இயக்க முடிகிறது,  அப்பப்ப  இவர்களை போன்றவர்கள், பொருளாதார நிகழ்வுகளை கணிக்க முயன்று கொடுக்கும், டிப்புக்களால்  பங்கு விற்றல் வாங்கல் நடந்து, நம்மைப்போன்றவர்கள் வாங்குதற்கு வாய்ப்புக்கள் உருவாகும்.  சாதரணமாக எல்லோருக்கும் தெரியும்  ஒரு விஷயம்,  எல்லா தொழிலும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை,  உதாரணத்திற்கு  காய்கறி சந்தையில், ஒருசில காய்கறிகளின் வரத்து கூடுதல் ஆகும் போது விலை இறங்குவதும், வரத்து குறையும் போது விலை கூடுவது போல.  ஒரே நேரத்தில் எல்லா காய்கறிகளின் விலையும்  கூடுவதோ குறைவதோ சாதரணமாக  இருக்காது.  அதே போல் தான் வெவ்வேறு தொழில் துறையும்  ஓரோர் சமயத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும்,  இதன் காரணமாக லாப நட்டங்கள் ஏற்படலாம். அதனால் ஷேர் விலைகள் ஏறி இறங்கும்,  அவற்றின் தாக்கங்கல்,  நாம்  தாங்கும் அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக, வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்ய பரிந்துரை செய்வார்கள்.  நம் போன்றோர் மிக குறைந்த முதலீட்டில்  ஆரம்பிப்பதால் அப்படி செய்ய இயலாது,. அவசியமும் இல்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்பவர்கள் அப்படி செய்யலாம்.  கம்பனிகள் ஆரம்பித்தவர்கள் எல்லாம், அதிலேயே  சம்பாதித்து நன்கு வளர்ந்த பின்னால் தான் வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்,   இந்திய சந்தையில் பணம் பண்ணிய பெரும்பாலான கோடீஸ்வரர்கள் ஒரு கம்பனியில் முதலீடு செய்தே சம்பாதித்து இருக்கிறார்கள். நம்மை போன்றோர்  முதலீடு செய்த கம்பனியின் ஷேர்கள்  இரங்கி வரும் போது இன்னும் கூடுதலாக வாங்க வேண்டும்.

மியுச்சுவல் பண்டில், E T F  இல் முதலீடு செய்ய சொல்பவர்கள்,  ஒரு விஷயத்தை கவனித்து இருக்கிறார்களா என்பது தெரிய வில்லை.  நாம் முதலீடு செய்யப்போகும் கம்பனிகளும்,  அவர்கள் முதலீடு  செய்திருக்கும் கம்பனிகளில் தான்.  அவர்களால் லாபம் சம்பாதிக்க முடியும் போது நம்மால் என் முடியாது ?.  சில வரை முறைகளை நாமும் நமக்கென வகுத்துக்கொண்டு அதன் படி செயல் பட்டால் நம்மாலும்,  சம்பாதிக்க இயலும்.  இந்திய சந்தைகளில்  சில ஆயிரம் கம்பனிகள் தான்,  பல் வேறு  எக்செஞ்சுகளில் லிஸ்ட் செய்யப்பட்டு,  வியாபாரம் செய்யப்படுகிறது.  இவைகளில் இருந்து தான் அவர்களும்  தேர்வு செய்து முதலீடு செய்கிறார்கள்.  நூற்றுக்கணக்கான  மியுச்சுவல்  பண்டுகலும்,  E T F  களும் இருக்கின்றன,  அவற்றில் சில வற்றை எடுத்துக்கொண்டு,   எந்தெந்த கம்பனிகளில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களானால்,   பெரும்பாலான கம்பனிகளில் எல்லோருமே முதலீடு செய்திருப்பார்கள் !!!!!.   

இந்த தொடரை  தொடந்து வருபவர்களுக்கு,  நீண்ட கால முதலீட்டினால் மட்டுமே பங்கு சந்தைகளில் சம்பாதிக்க முடியும் என்பது போன்ற ஒரு எண்ணத்தை உருவாக்கி இருக்கும்.  பலர்  ட்ரேடிங் செய்து சம்பாதிப்பதையும், டிரைனிங் தருவதாகவும் விளம்பரம் செய்வதையும் பார்த்திருக்கலாம். இன்னும் சிலர் குறைந்த விலையில் வாங்கி, விலை ஏறியதும் விற்று  சம்பாதித்ததாக கூறுவதையும் படித்திருப்பீர்கள்.  பெரும்பாலோர்  கமிசனை பற்றி சொல்லி கணக்கிட்டு இருக்க மாட்டார்கள். கிடைத்த லாபத்தை மட்டுமே சொல்லி இருப்பார்கள், அந்த லாபம் அடைய செய்த செலவை சொல்ல மாட்டார்கள். சம்பாதிக்கவே முடியாது என்பதல்ல, அதற்க்கு  சில  அடிப்படை கணக்கீடுகள் செய்து  முயற்சி செய்ய வேண்டும்.  அதுவும் இன்று வாங்கி நாளை விற்பதால்  அல்ல !!!!.  அதற்கு நமக்கு மிகுந்த அனுபவம் வேண்டும்,  சந்தையின் போக்கை சிறிது காலம் கவனித்து, புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய முதல் நோக்கம் லாபம் சம்பாதிக்காவிட்டாலும், வாயை கட்டி வயிற்ரை கட்டி சேர்த்ததை இழந்து விடக்கூடாது,  முதலை இழந்து விடா முயற்சிகளை செய்து சம்பாதித்து கொண்டு,  அடுத்த முயற்சிகளை சிறிது சிறிதாக செய்யலாம். இதற்கிடையில் சந்தை பற்றிய புரிதலும் ஏற்படும்.

இறைவன் நாடினால் தொடர்ந்து  விபரங்களை பார்ப்போம் ............  

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........