Friday, August 14, 2015

நெஞ்சில் ஓர் இனம்புரியாத வலி.........திகறடி.......

நாங்கள்  சிறு வயதிலிருந்தே ஒன்றாய் விளையாடி, பள்ளிக்கும் பின்பு கல்லூரிக்கும் சென்று  18, 19 ஆண்டுகளை  ஒன்றாய் கழித்து,  அடுத்தடுத்து  இருவரின்  தந்தையையும்  இழந்து, ஒருவருக்கொருவர்  ஆறுதலாய் இருந்தவரை ஒன்றுமே தெரியாது.  கோயில் திருவிழாவிலே  பாட்டுக்கச்சேரி, பட்டிமன்றம், வழக்காடு என்றால் முதலில் நிற்போம். ஒன்றாய் காலாற நடந்து வருவோம் என்று செல்லும் போது,  பாங்கொலி கேட்டால் நான் தொழ  செல்லும் போது, காத்திருந்து கூட்டிச்செல்லும் அன்னியோன்யம்.  மார்கழி மாதத்தில்  விடியற்காலையில் மூன்றரை மணிக்கு விநாயகர் கோவிலில் போடும் இசைத்தட்டுக்களை கேட்டு, கே.பி. சுந்தராம்பாள், வீரமணி பாடல்களை மனனம் செய்து பாடிக்காட்டி களித்தது எல்லாம்  இன்று நினைவாக  இருக்கவோ என்னவோ, இரை தேடி கடல் தாண்டி பயணங்கள்.


இடை இடையே அவர் ஊர் வரும்போது. நான் இல்லை. நான் வரும்போது அவர் இல்லை இப்படியான கண்ணாம்மூச்சி. சிலநேரங்களில் சந்தித்தோம், ஹாய், ஹலோ என்ற உதட்டு உறவோடு போய்விட்டது    வெகு காலத்திற்கு பின் ஊர் சென்ற போது,  அவரும் இரைதேடி பறந்திடும் வாழ்கை போதும் என்று ஊரில் இருந்தார்.  உவகையோடு, பழைய இனிய நினைவுகள் கரைபுரண்டு வர பார்க்க சென்றால்,  சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே என்னுடன் கை குலிககினார்.  கைகளின்  உரசலில் உணர்வோட்டம்,   பழைய பாந்தம்,  கண்களில் கசிந்திடும் கனிவு இல்லை,   என்னால் ஜீரணிக்க முடிய வில்லை,  என் தோற்றத்தின் விளைவா? அல்லது   தமது  குடியிருப்புக்களின் மத்தியில் மாற்று மதத்தினருடன்  சகஜமாயிருப்பதை விமர்சிப்பார்கள் என்ற பயமா?.  இத்தனை கற்றும்,  அடுத்தவர் விமர்சிப்பர்களே என்ற  முதிரா இளம்பிள்ளைகளின் நெஞ்சா,   பர தேசங்கள் சென்று வந்தும்,  மனம் பண்பட்டு, விரிவடைய வில்லையா ?.   என் தேசமும், சுற்றமும், நட்பும் ஏன்  இப்படி சுறுங்கி காய்ந்த திராட்சை  மனத்தினராய்   ஆனார்கள் ?   எனதருமை தேசமே  நினைக்கும் போதே நெஞ்சில் ஓர் இனம்புரியாத வலி.......... திகரடி.... ,திடுக்கம்  வருகிறது!!!!

இதே பிளாக்கில்  இந்திய ஜனநாயகத்தையும், பாகிஸ்தானிய ராணுவ ஆட்சியையும் ஒப்பிட்ட, ஒரு வெளிநாட்டு காரரின் கட்டுரையை தழுவி ஒரு பதிவுCLICK HERE எழுதியிருந்தேன். அது எழுதும் போது என் மனதில் நிழலாடிய விஷயம்,  நாடு விடுதலை அடைந்த போது பாகிஸ்தானில்  அரசியல் தலைவர்களுக்கு பஞ்சம்,  அரசியலுக்கு வந்த ராணுவ அதிகாரிகள், மக்கள் துன்புற்ற போது, சுகம் அனுபவித்தவர்கள், ஜால்ராக்கள்.  சுதந்திரம் அடைந்த பின்பும் முடிந்தவரை சுருட்டிக்கொண்டு,  பழைய  துரைகளின் நாட்டுக்கே சென்று விடலாம் என்று எண்ணியவர்கள்,  அதனால் தான் பாக்கிஸ்தானின் முன்னேற்றத்திற்கு ஒரு சிறு துரும்பை  கூட கிள்ளிப்போட வில்லை.

எங்கள்  வீட்டில் ஒருமுறை, மேலே சொன்ன நண்பரை பற்றி பேச்சு வந்த போது,  அவனைப்பார்  உடனொத்தவன்,  துபாய் போனான் இரண்டு வருடங்களில் திரும்பி வந்து வீடு கட்டி கல்யாணமும் முடித்துவிட்டான்!!!!!!.  நீயும் தான் இருக்கிறாய் பார் என்று சொன்னார்கள். அவருக்கு ஏற்கனவே சொந்தமாக வீடுகட்டுகிற மனைக்கட்டு  இருந்தது, வசதி இன்மையால்,  கீற்று வேயப்பட்ட கூரையாய்  இருந்தது.  துபாயில் இருந்து வந்ததும், அவருக்கு பெண் கொடுத்த அக்காள் வீட்டுக்காரர் சிங்கப்பூர் இல் இருப்பவர், அவர்வீடு இரண்டு மாடி காரை வீடு,   அங்கு பிறந்து வளர்ந்த தன மகள்,  குடிசையில் வாழ சென்றால்,  தன தகுதி என்னாவது  நினைத்தாரோ என்னவோ ?.   உங்களால் இயன்றதை   நீங்களும்   போடுங்கள்,  மீதியை நான் போடுகிறேன் என்று சொல்லி,  வீட்டை மாடி வீடாக,  மகளையும்  மணமுடித்து  கொடுத்து விட்டார்   கொடுத்து விட்டார். இதை நான் எங்கள் வீட்டில் சொல்ல முடியுமா ?.

என் நிலைமை அப்படி அல்ல,   அடிப்படையில் இருந்து எல்லாமே தானே செய்து கொள்ள வேண்டும், மனையும் வாங்க வேண்டும்,  வீடும் கட்ட வேண்டும்,  நிறைய பொறுப்புக்கள் இருந்தது  அதையும்  நிறைவேற்ற வேண்டும்.  காலம் எடுத்தாலும்,  இறை அருளால் எல்லாம் நலமே முடிந்தது, எல்லா புகழும் இறைவனுக்கே.

இன்று நாமெல்லால் காங்கிரஸ்காரர்களை, கரித்துக்கொட்டுகிறோம், அறுபது ஆண்டுகாலம் ஆண்டிருக்கிறார்கள், என்ன செய்து இருக்கிறார்கள் என்று ?.  நாட்டை விட்டு ஓடியபோது,   நாடு முழுதும் பஞ்சம், பசி , பட்டினி, ஆங்காங்கே குட்டி சமஸ்தானங்கள், சுதந்திரம் அடைந்த ஓராண்டிலேயே,  சுதந்திர வேள்வியை,  புதிய பாணியில் நடத்தி  உலகை  திரும்பி பார்க்க வைத்த மனிதனை காவு கொடுத்தது.  நாங்கள் இங்கிருத்து போனால் ஒரு நிமிடம் கூட உங்களால், நாட்டை நிர்வகிக்க முடியாது என்று ஆணவத்தால் கொக்கரித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.  இந்த சூழ்நிலையில்  தேசத்தை உருவாக்கி,  உலகப்படத்திலே இடம் வாங்கி தந்திருக்கிறார்கள். பாகிஸ்தான்  போன்று ஒரே மத மக்களல்ல இந்தியாவில்,   எத்தனை  இனம் ?   எத்தனை இனம் ?.  தியாக உள்ளம் படைத்த தேசத்தலைவர்கள். அவர் தம் இடையறா உழைப்பால் உருவானது தான் இந்த தேசம்.   

அந்த நன்மக்களை  என்னென்னவோ  சொல்லி தூற்றுகிறார்கள்.   எதிர்கால சந்ததியினரின்  மனதில் நச்சு  விதை விளைத்திட முயன்று,  சரித்திர நிகழ்வுகளை மாற்றி,  திரித்து  எழுதுகிறார்கள். பரந்த இந்திய தேசம்  ஒன்றாய் இருந்தால்,   தங்கள் ஆதிக்கம்  விலக்கப்பட்டு விடுமோ என்ற கவலையில்,ஆங்கிலேயன்   பிரித்தாள  செய்த சூழ்ச்சிகளை எல்லாம் நமக்குள் செய்கிறார்கள்.  சுதந்திரம் என்றால் என்ன என்று  தெரியுமா உனக்கு ?  என்று  யாரும் கேட்க தோன்றும் காரியங்களை செய்கிறார்கள்.  உண்மையில் சுதந்திரம் என்றால் என்னவென்று இவர்களுக்கு தெரியுமா ?  இவர்களின் செயல்பாடுகள் அப்படியொரு அபிப்பிராயத்தை உருவாக்க வில்லை. பெரும் பெரும்  தியாகங்கள் செய்து,  இந்திய தேசமாகிய வீட்டை கட்டி உருவாக்கி  இருக்கிறார்கள்,  இன்று வீட்டுக்கு வெள்ளை அடிக்க வந்தவன், வீட்டை உருவாக்க செய்த தியாகங்களை மறந்தவனாக  கட்டியவனை குறை சொல்கிறான். 

இன்றைய  காங்கிரசில் இருப்பவர்களெல்லாம், அரசியலில் இருப்பவர்களெல்லாம்   உத்தம புத்திரர்கள் இல்லை.  அண்ணாதுரையிடம், ஒரு முறை, நடிகை பானுமதியையும்  அவரை யும் பற்றி கிசு கிசுக்க பட்ட போது, அது பற்றி அவரிடம நேரிடையாக கேட்கப் பட ,    அவள் படிதாண்டா பத்தினியுமல்ல, நான் பதிவிரதனுமல்ல.  என்றாராம்.  அது போல இன்றைய  அரசியல்வாதிகள்   எல்லோருமே  ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்  தான்.. இன்று நம் நாட்டிலே தேச தலைவர்கள், தேசப்பிதாக்கள்  இல்லை.


காவிக்கட்சியில்  ஆட்களுக்கு பஞ்சம், அதனால் தான் நரகல் நடைக்காரனில் இருந்து , முற்றும் துறந்தவன் என்று சொல்லி ஊரை கொள்ளையிட நினைப்பவன், மொள்ளமாரி, முடிச்சவிக்கி எல்லோருக்கும்,  எல்லா பதவியும்.  இவர்கள்  கையில் நாடு சுதந்திரம் அடைந்த புதுதில் கிடைத்திருந்தால்,  சர்ச்சில் சொன்னது சரியாய் போயிருக்கும்,  பாகிஸ்தான் எவ்வளவோ மேல்  என்று சொல்லு மளவிற்கு நாடு இருந்திருக்கும். என் தேசம் சிதறுண்டு சின்னாபின்னமாய், குட்டி ராஜ்யங்கள் ஆக போய் இருக்கும். நாமும் கூட திராவிட நாட்டில் இருந்திருப்போம் !!!!!!!. 

ஒருகை ஓசையிட முடியாது,  இந்நாட்டு  இளைஞன் இன்று பாரெங்கும் பரவி, தன அறிவாற்றலால், திறமையால் இந்த தேசத்திற்கு பெருமை தேடி தந்து கொண்டிருக்கிறான்,   ஹை டெக்  என்றால் இந்தியர்கள்  தான் என்று எண்ணுமளவிற்கு, கொண்டு வந்து வைத்திருக்கிறான்.  அவர்தம்  உழைப்பில்  குளிர் காய்ந்து கொண்டு, நாட்டை நரகமாக்கி,  இந்த தேசத்தின் மேன்மையை  சீரழித்து, கற்காலத்திற்கு கொண்டு சென்று விடாதீர்கள்,  இந்திய இளைஞனின் கனவை கருக்கி விடாதீர்கள்,  எம்மையும்  எம் தேசத்தையும் வாழ விடுங்கள் என்று  இருகரம் கூப்பி அரசியல்வாதிகளை  வேண்டி,   

இந்த சுதந்திர நினைவு  நாளிலே  இறைவா, பரம்பொருளே, சர்வ சக்தி வாய்ந்தவனே, மனிதர்களின் கற்பனைக்குள் அடக்க முடியாதவனே அருள் புரிவாய் என்று வணங்கி முடிக்கிறேன்.

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........