Saturday, August 8, 2015

சல்லி முட்டி( piggy bank ) மில்லியனர் !!!!!!!!!

நம்முடைய வீடுகளில் இன்றும் கூட சிறுவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பெரியவர்கள், மண்ணாலான  " சல்லி முட்டி " (  தற்காலத்தில் piggy bank என்று அழைக்கிறார்கள் )  வாங்கி கொடுத்து சேமிக்க பழக்குவார்கள்.  அதில் இருக்கிற சிறு இடைவெளி வழியாக காசு            ( சல்லி )  போட  முடியுமே தவிர எடுக்க முடியாது. தெருவில் கூவி விற்கிற சாமான்கள் வாங்குவதற்கு தான் காசு எடுக்க நினைப்போம்,  சல்லி முட்டியில் இருந்து எடுப்பதற்குள், வியாபாரி காத தூரம் பொய் விடுவார். இதனாலேயே நாம் எடுக்க முயற்சிப்பதே இல்லை.  இது நமது சேமிப்பை தொடர்வதற்கு ஒரு தூண்டு கோளாகவும்  இருக்கும்.

இனி சல்லி போட முடியாது என்ற நிலை வந்ததும், உடைத்து தான் எடுக்க வேண்டும்.  உடைத்து அதிலிருக்கும் சல்லிகளை எண்ணி,  எத்தனை ரூபாய் என்று பார்ப்பதிலே இருக்கும் சந்தோசம் அலாதி  தான்.  நாம்  நம் வயதிற்கு தக ஏதாவது பொருள் வாங்கி செலவு செய்து விடுவோம்.   சில காலம் இவ்வாறு சேமிக்கின்ற சில்லறையை, நம்மிடம் இருந்து வாங்கி சென்று வங்கிகளில் நம் கணக்கில் சேர்க்க வென்று,  சிலரை அனுப்பிக்கொண்டிருந்தன.   குழந்தைகளிடம்.   வாழ்க்கைக்கு தேவையான நல்ல  பழக்க வழக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தொடங்கிய அந்த செயலை,  முட்டி நிறைந்ததும் உடைத்து எடுத்து " ஏதாவது "  செய்யும் போது, அதனை செலவிடாமல், தொடர்ந்து சேமிக்க வேண்டும் என்பதாக பெரும்பாலான பெற்றோர்  சொல்லிக்கொடுக்கததால், அப்படியே மனதில் பதிந்து, பெரியவர்களான பின்பும் சேமிப்பு என்ற எண்ணமே எடுபட்டு  போய் விட்டது.  நம்மிடையே சில இனத்தார், இச்சேமிப்பு தொகையை கொண்டு,  அந்த தொகையின் மதிப்பை தக்க வைத்துக்கொள்ளும்                                           (  மோதிரம்,செயின், கம்பனிகளில் ஷேர்), தாங்களே உபயோகித்து பிறரிடம் காட்டி பெருமை பட்டுக்கொள்ள கூடிய பொருள்களை வாங்கி கொடுத்து/ வாங்கசொல்லி,  சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பார்கள்.

சிறுவர்களாக இருக்கும் போது  சல்லி முட்டியை உடைத்து எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார்க்கும் போது ஏற்படுகின்ற சந்தோசம்  அலாதியானது,  அம்மாதிரியான ஒரு நிகழ்ச்சி பெரியவர்களான பின்பும்  நடந்தது.   சில காலத்திற்கு முன்பு நாங்கள் நண்பர்கள், பணி  நிமித்தமாக மாதத்தில் இருபது நாட்கள் வரை பயணத்திலேயே இருப்போம்.  நண்பர் ஒருவர்,  அவர் பிரயாணத்தில் இருந்து திரும்பி வரும்போது கையில் இருக்கின்ற சில்லறையை அப்படியே ஒரு தோல் பையில் போட்டு வருவதை பார்த்து மற்றோரும் அப்படியே செய்ய ஆரம்பித்தோம். ஒரு சிறிய மாற்றம்,  ஒரு ரூபாய்க்கு மேல் உள்ள நாணயங்களை மட்டும் தான் நாங்கள் சேர்த்தோம்.  நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை அவரவ்ருடையதை எண்ணிப்பார்க்கும் போது,   ஒரே பிரமிப்பாக இருக்கும், அதி சர்வ சாதாரணமாக  1500, 2000 ரூபாய் வரை இருக்கும், இத்தனைக்கும் அது இருந்ததாக யாரும் நினைப்பதே இல்லை.

ஒரு சின்ன கணக்கு,  என் மனதில் ஒரு கம்பனி இருக்கிறது, பெயர் சொல்ல விரும்ப வில்லை, இந்த சில்லறையை மட்டும் அந்த  கம்பனி ஷேரில் முதலீடு செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் பாருங்களேன். அந்த கம்பனியின்  ஷேர்  அப்பொழுது ரூ 60 விற்றது, நான்கு மதத்திற்கு ஒருமுறை ரூ 1750 இக்கு ( சேரும் சில்லறை ரூ 1500 இக்கும் ரூ 2000 க்கும் இடையில்)  ஷேர்  வாங்குவதாக கொண்டால் வருடத்திற்கு 3 முறை, ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 90 ஷேர் வாங்கியதாக  கொள்வோம்.  வருடத்திற்கு 270 ஷேர்.  அதே பணியில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் இருந்தோம்,  மொத்தம் 1620 ஷேர்கள்  இருந்ததாக கொள்வோம்.  இன்றைக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன,  அந்த கம்பனி ஷேர்   ரூ 740 இக்கு விற்கிறது.  இன்றைய நிலவரப்படி 1620 ஷேர் இன் விலை  ரூ 11,98,800 ( 740 x 1620 ) கிட்டத்தட்ட 12 லட்ச ரூபாய். போட்ட முதலீடு ரூ 31,500 (3 x 1750 x 6 ) இது  அல்லாமல் கம்பனி டிவிடண்ட்  கொடுத்திருக்கிறது,  விலை ரூ 60 ஆகவே இல்லாமல் கூடி குறைந்திருக்கிறது, போனஸ் ஷேர்  கிடைத்திருக்கிறது இவைகளையெல்லாம் கணக்கிட்டால் தொகை எங்கோ போய்  விடும்.   இதில் எதுவுமே கற்பனையல்ல, நம்புங்கள். இந்த சிறு சில்லறையின் மகிமையை பார்த்தீர்களா ?.  இப்படி செய்தவரை  சல்லி முட்டி மில்லியனர்  எனலாமா!!!!!!!

பெரிய பருப்பு மாதிரி சொல்றியே யாரு இப்பிடி இருக்கிறது ?   என்று கேட்கிறீர்களா ?. உங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கலாம்.  செட்டியார் . மார்வாடி,  சினிமாக்காரங்க, ஹி....ஹி.... நம்ம அரசியல்வாதி ....... இப்படி லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.  உங்க ஊர்லே பெரிய ஆடிட்டர் இருந்தா,  உங்களுக்கு நெருக்கமானவரா இருந்தா, இப்படியெல்லாம் இருக்கிறார்களா? என்று கேட்டு பாருங்கள்.   பணக்காரர்களின் சிதம்பர ரகசியம் எது தெர்யுமா ? ரகசியம் தான். 

இப்ப அமேரிக்கா மாதிரி நாடுகளில் எல்லாம், இந்த சேமிப்பு பாடம் எடுத்து கொள்கிற அளவுக்கு நேரமும் இல்லை, யாராவது காதை பிடித்து திருகினால் தான் அன்றி சேமிப்பு செய்ய போவது இல்லை அப்டீன்னு,  இது புதுசு, போனே செய்யும்,  ஆப்  (aap ) இருக்கிறது என்றால் உடனே செய்வார்களே!!!!!!.   மாசத்துக்கு ஒரு டாலர் கொடுத்தால் போதும், ஒங்க  வங்கி கணக்கு எண்ணை கொடுத்தால் போதும்,  நீங்கள் ஒவ்வொரு முறை சாமான் வாங்கும் போதும், வருகிற தொகையை ரவுன்டாக்கி, சில்லறையை சேமிப்பு  கணக்கில் சேர்த்துக்கொண்டே இருக்கும்.  உதாரணத்திற்கு  $ 5.25 வந்தால், $ 6.00 உங்கள் கணக்கிலிருந்து பொய் விடும், $ 0.75 உங்களுடைய சேமிப்பு கணக்கிற்கு தானே பொய் விடும!!!!!.

சாதாரண வங்கி கணக்கோடு, சேமிப்பு கணக்கையும் சேர்த்து திறந்தாள், சாதாரண  கணக்கிற்கு உள்ள சற்விஸ் சார்ஜ் கிடையாது மேலும் நாம் சொல்லுகின்ற கால இடைவெளியில், சொல்லுகின்ற தொகையை சேமிப்பு கணக்கிற்கு மாற்றவும் செய்வார்கள். நம் நாட்டிலேயும் கூட இப்படியான கணக்குகள் வந்து விட்டது,  வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

பெரும் தொகையோ, சிறு தொகையோ எதுவாக இருந்தாலும் சேமிப்பு கணக்கிலேயோ, வீட்டிலேயோ அல்லது வளரா உருவிலேயோ இருக்குமானால் அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை,  எதில் எப்படி அதனை முதலீடு செய்தால் வளரும் என்பதை அறிந்து, திட்ட மிட்டு, தொடர்ந்து செய்தால், பிரமிக்கத்தக்க முடிவுகளை காணலாம். 

தான் நடத்தி வந்த சிறு தொழிலில் இருந்து வருகிற வருமானம் மிக குறைவாக இருக்கிறதே,  உழைக்க முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று குழம்பி, கிடைப்பதற்குள் ஒரு சிறு தொகையை  ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சேர்த்து கொண்டே வருவோம், நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து செய்தவர்.  காசில்லாவிட்டாலும், சரியான திட்டமிடல் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பவரை, இறைவன் நாடினால் இப்பதிவின் இரண்டாவது பகுதியாக காணலாம்...........






    





No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........