Saturday, August 22, 2015

ஆட்டோமாடிக் மில்லியனர் ஆகலாமா ? ..!!!!!!!!!!!!!!!

இன்று நம்மில் பலர், படித்தும் சரியான வேலை கிடைக்க வில்லை, வருகின்ற வருவாய் போதவில்லை,  பல ஆயிரங்களை செலவிட்டாவது  வெளிநாடு செல்வோம் என்று செல்கிறோம்.  வேலை கிடைத்தும் இத்தனை ஆண்டுகளில் சாதித்தது ஒன்றுமில்லை என்று அரசு வேலையில் இருந்தும் விடுப்பெடுத்து வெளி நாடு  செல்வோரும்  குறைவன்று.    அத்துணை பேருடைய  அவாவும், கனவும் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான்.  நாளை நம்முடையவும், நம்மை  சார்ந்தோரின் எதிர்காலத்தையும் இலகுவானதாக்கி கொள்ள வேண்டும் என்ற பெரு நோக்கமும் தான். 

முதல் மூன்று மாத சம்பளங்கள் பெரும் வரை தான்,  நாம்முடைய நோக்கங்கள் எல்லாம்  நினைவில் இருக்கும் அதன் பின்பு அவையெல்லாம், பின் இருக்கையில்  இடம் பிடிக்க தொடங்கி, காலப்போக்கில் எதற்காக வந்தோம் என்ற நோக்கத்தை மறந்தவர்களாக ஆகி விடுகிறோம்.  கண்ணில் காண்பதை எல்லாம் வாங்க தொடங்குகிறோம்.  வருவாய் மாறாமல் இருந்தாலும், தேவைகள் கூடிக்கொண்டே போகின்றன.  கால ஓட்டத்தில் குழந்தை குட்டிகளாகி, அவர் தம் படிப்பு செலவு, திருமண செலவு என்பவை நெருங்கும் போது,  எதை விற்பது ?, யாரிடம் கடன் வாங்குவது ?  என்று சிந்தனை  சிறகு படபடத்து,   மன அழுத்தம், சர்க்கரை என்று சொல்லொனா நோய்கள் வருவது  தான் மிச்சம். வெளிநாடுகளில் பொருள் ஈட்டுவோரை விட உள்ளூரில் உள்ளவர்கள் சிறிது மேல், காரணம் அவர்களது நினைவில் சதா இருப்பது, குறைந்த வருவாய் எப்படி சமாளிப்பது என்ற யதார்த்தம் தான்.


இது நமக்கு மட்டும் அன்று நமக்கு முன்பும் பலபேர் பட்டிருக்கிறார்கள்,  இன்றைய தேதியில் நாம் அவர்களிடம் இருந்து ஏதாவது படித்து                            இ ருக்கிறோமா ?  இல்லை நம் குழந்தைகளுக்கு எதார்த்தத்தை சொல்லி கொடுத்திருக்கிறோமா? நம்மில் சிலர் பட்ஜெட் போட்டு செலவுகள் செய்வோம் என்று செய்வோம், " பட் " செலவுகள் " ஜெட் " வேகத்தில் செல்வது தான் மிச்சம்.

இப்படி நாம்  செய்ய நினைக்கின்ற எதையும், தொடர்ந்து செய்வதில்லை, ஒரு வேலை செய்யவேண்டும் என்று தொடங்குகின்ற நேரத்தில் வேறொரு வேலை வந்து அதை பிறகு செய்வோம் என்று ஒத்திவைத்து சுத்தமாக மறந்து விடுவது  என்பது நம்மில் பலருக்கு வழக்கமான விஷயம். நம்மை யாராவது ஒருவர் அருகிலிருந்து அறிவுருத்திக்கொண்டிருந்தால்  ஒருவேளை முடியுமோ என்னவோ  ?.   எத்துனை பேருக்கு அப்படி வாய்க்கும் !!!


நம்மை போன்று வெளிநாட்டில் வாழ்வோருக்கு பேங்குகளில் கரண்ட் அக்கவுண்ட் என்பது கண்டிப்பாக இருக்கும்.  ஊரிலே இருப்பவர்களுக்கும் இருக்கும்.  பேங்குகள் தரக்கூடிய சேவையை வைத்து   " ஆட்டோமாடிக் மில்லியனராக  " லட்சாதிபதியாக  நம்மை உருவாக்கி கொண்ட  ஒரு  தம்பதிகளின்  வாழ்க்கை நிகழ்ச்சியை  பாருங்கள்.  தனக்கு தேவையானதை, அடுத்தவரை குறை சொல்லாமல், இருக்கின்ற வாய்ப்பு வசதிகளை சிறிது மாற்றி சிந்தித்து  சாதனை செய்ததை பாருங்கள். நாமும் வெற்றி அடைவது என்பது அவரவர்  தீர்மானத்தை பொறுத்தது.  எதிர் கால் வாழ்க்கையை பற்றி கவலைப்படுபவர்கள் சிந்தித்து செயல் படுங்கள்.  

புது மணம்  மாறா இளம் தம்பதிகள், இருவரும் வேலைக்கு செல்லக்கூடியவர்கள்.  தனியாக குடித்தனம்  போக  போகிறார்கள், மணமகனின் பெற்றோர் இருவரையும் வைத்து உலக நிலைமைகளை சொல்லி, இருவருமே சம்பாதிக்கிறீர்கள் எதிகாலத்தை எண்ணி சிக்கனமாக இருந்து  ஆற்ம்பத்தில் இருந்தே சேமிப்பை உருவாக்கி கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லி அனுப்புகிறார்கள்.

இருவரும் விவரமான வர்களாதளால், பட்ஜெட் போட்டு செலவு செய்கிறார்கள், மாதக்கடைசியில் நினைத்த தொகையை சேமிக்க முடியவில்லை,  ஒருவொருக்கொருவர் உன்னால் தான் என்று                                 ஒருவர் மற்றவரை குறை சொல்லிக்கொண்டு ஓரிரு மாதங்கல் ஓடுகிறது.   பின்பு இதனாலையே  கணவன் மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டு  சதா சண்டையாக இருக்கிறது.  ஒரு கட்டத்தில் பொறுக்க  முடியாமல் மனைவி தன தாயாரை அழைத்து, ஒரே  சண்டை சச்சரவாக  இருக்கிறது,  இரண்டு பேர் சம்பாதித்தும் நிம்மதி இல்லை, நான் உங்களுடன் வந்து இருக்கப் போகிறேன் என்று சொல்கிறார்.

அவரது தாயார் சிறிது நேரம் யோசனையில் இருந்து விட்டு,   பட்ஜெட் போட்டு செலவு செய்தீர்களா ?   என்று கேட்க,  மகள் ஏன் அப்படி கேட்கிறீர்கள் ?  என்கிறார்.  நானும் உங்க அப்பாவும்  பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த போகிறோம் பேர்வழி என்று ஆரம்பித்ததும் போதும் ஒரே சண்டைதான்,  என்னைக்கு  பட்ஜெட்டை தலையை  சுற்றி வீசினோமோ  அன்றிலிருந்து தான் நிம்மதி என்றார்.   அம்மா...... எனக்கு தலை சுத்துது !  நாங்க ரெண்டுபேரும் சம்பாதித்தும் ஒன்று மிஞ்சலம்மா........என்று பிரலாபிக்கிறார் மகள். தாயார் சிரித்துக்கொண்டே மகளை  ஒருபுறமாக அழைத்து செல்கிறார்.

வீட்டு வாடகை, கரண்டு பில், மளிகைக்கடை பில்.................என்று சம்பளம் வாங்கியதும் எல்லோருக்கும் பங்கு இடுகிறோமே,  என்றாவது  நமக்கு ஏதாவது கொடுக்கிறோமா ?....... அம்மா அதில் தானே பிரச்சினையே  என்று பேச தொடங்கிய மகளை அடக்கி.  திட்டமிடலின்  அரிச்சுவடியே  அது தாம்மா. எது எக்கேடு கெட்டாலும் முதலில்  உங்களுக்கு கொடுக்க வேண்டியதை முதலில் கொடுங்கள், பிறகு மற்றவர்களுக்கு கொடுக்க பழகுங்கள் என்றார். சம்பளம் பேங்குக்கு வந்ததும் ,  உங்கள் சம்பளத்தில்  5 % அல்லது 10 %  ஐ  கரண்ட் அக்கவுண்டில் இருந்து சேவிங் அக்கவுண்டுக்கு மாதா மாதம் ஆட்டோமாடிக்காக மாற்ற சொல்லுங்கள், மீதி இருக்கிற தொகையை உங்கள் இஷ்டப்படி செலவு செய்துகொள்ளுங்கள் என்று யோசனை சொல்கிறார். .

கணவன் வீடு வந்த பெண் முதலில் செய்தது,  .சம்பள பணம் வந்ததும் அதில்      10  % மாதாமாதம் ஆட்டோமாடிக்காக சேவிங் கணக்கிற்கு  டிரான்ஸ்பர் செய்யச்சொன்னது, அதே போல், கணவரையும் செய்யச்சொன்னது.  சிறிது சிறிதாக வீட்டில் மகிழ்ச்சி திரும்பியது.   ஆறேழு மாதங்களில்,  பேங்கில் சொல்லி 10 %, 15 % ஆகி, இரண்டு மூன்று வருடங்களில் 25 % அளவிற்கு   ஆனது.  சிறிது சிறிதாக கூட்டியதால், அதன் சுமையே தெரியவில்லை என்கிறார். நான்கு வருடங்களில்,  வீடு வாங்குவதற்கான  டவுன் பமென்ட் கிடைத்துவிட்டதால் எளிதாக வீடு வாங்கி விட்டோம். வீடு வாங்கினாலும் தொடர்ந்து  25 %  சேமித்துக்கொண்டே வந்தோம்.  இடையிடையே தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில், பேங்கில் சேர்ந்த தொகையையும் வீட்டு கடனுக்காக கட்டிக்கொண்டே வந்தோம், இதனால் 30 வருடங்களில் கட்டி முடிக்க வேண்டிய கடனை இருபது வருடங்களில் முடித்துவிட்டோம்.

கடன் என்பது இல்லாத தாலும், பேங்கில் பணம் சேருவதாலும். ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி சந்தோசம் இருந்தது, இதற்கிடையில் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டோம், ஆறு ஏழு  மாதத்தில் மற்றொரு கவலை வந்து விட்டது.  வாடகை பணமும் மிச்சமாகிறது, 25 % சேமிப்பும் பேங்கில் சேருகிறது.  அந்த பணம் நமக்கு  "வேலை "  செய்யாமல் இருக்கிறதே என்று, எதில் முதலீடு என்று இருவரும் ஆலோசனை செய்து, இந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு. நமக்கு குடியிருக்க வென்று வேறொரு வீடு வாங்குவோம் என்று வாங்கினோம். வந்த வீட்டு  வாடகை,  25 % சேமிப்பு என்று  புதிய வீட்டு கடனையும்   விரைவில் கட்டி முடித்துவிட்டோம்.   பேங்கில் ஆறு லட்சம் கேஷ்,  எட்டு லட்சம் பெறுமானமுள்ள இரு வீடுகள், மனத்திற்கு  பிடித்த  கார். இதுவரை இறை அருளால் நோய் நொடி என்று ஒன்றும் இல்லை, காரணம் எதிகாலத்தை பற்றிய கவலை இல்லை.

இறைவன் எங்களை எந்த குறையும் இன்றி வைத்திருக்கிறான், எங்களால் இயன்ற வரை தேவையானவர்களுக்கு உதவுகிறோம்,  அதிலும் நாங்கள் அனுபவத்தில் பெற்ற கல்வியை மற்றவர்க்கும் எத்திவைக்க முயல்கிறோம். இது  கம்ப  சூத்திரம் இல்லை, சிறிது கவலை, திட்டமிடல், மற்றவை இறை நாட்டப்படி நடந்தது. நாமாக சேமிப்பிற்கு என்று ஒதுக்குவோம் என்று இருந்தால் இது நடந்தே இருக்காது,  ஆட்டோமாடிக்காக செய்ததால்  தான் முடிந்தது, எங்களை என்ன சொல்வீர்கள்  "  ஆட்டோமாடிக் மில்லியனர் என்றா ? "

ஆகலாமா ?

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........