Wednesday, April 23, 2014

இறைவேத வாக்கியங்களுக்கு அடிபணியும் பிராணிகள்

அளவிலா அருளும், அலகிலா அன்பும் இலங்கும் ஓர் இறையின் இனிய பேர் போற்றி. அஸ்ஸலாமு அழைக்கும்

                          அல்லாஹ் தன திருமறையிலே,  மனித ஜின் இனத்தை  தன்னை வணங்குவதற்கே யன்றி வேறெதற்காகவும் படைக்கவில்லை என்றும்,  மற்றெல்லா படைப்பினங்களையும் மனிதனுக்காகவே படைத்துள்ளதாகவும்,  மார்க்க அறிஞர்கள்  சொல்லி  அறிகிறோம்.  மனித, ஜின் இனத்தை தவிர மற்றவை, எந்நேரமும்  இறைவனை  திக்ர் செய்வதாகவும்,  நம்மை விட இறைவனை நன்கரிந்தவையாக  இருப்பதாகவும் கேள்விப்படுகிறோம். இறைவனது பெயரோ, அவனுடைய வேத வாக்கியங்களோ உச்சரிக்கப்பட்டால், அறிந்து அடிபணிவதாக கேள்விப்படுகிறோம்.

                           பெங்களூர் உணவு  ஆராய்ச்சிக்கழக,  விஞ்ஞானி ஒருவர்  உணவுக்காக அறுக்கபப்டும் பிராணி, அடித்து கொல்லப்படும்போது,  உடனடியாக இறப்பு வராததினாலும்,  பயத்தினாலும்,  அதனுடலில் ஒருவகையான திரவம் சுரந்து  மாமிசத்தை  ராப்பரைப்போன்று,  ஒரு ஒவ்வாத சுவையுடையதாய் ஆக்கி விடுவதாகவும்,  இறந்தபிறகு  இரத்தம் உடலிலேயே  இருந்தால்,   நேரமாக, நேரமாக மாமிசத்தின்  சுவை கெடுவதாகவும் சொல்கிறார்.  முஸ்லிம்கள் செய்கிற  ஹலால்  முறையில்  இவ்விதம் நேர்வதில்லை என்று கூறுகிறார்.

                             மேலேசொன்ன  செய்திகளை  உள்வாங்கி கீழே உள்ள வீடியோ வை  பாருங்கள்.   
               

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........