Monday, April 14, 2014

சில செய்திகளை சீர்துக்கி பார்ப்போமா ?

காங்கிரஸ்,  காந்திக்கு  முன்பே  இருந்தது,  தென்னாப்ரிகாவிலிருந்து  வந்தபோது  காந்தி காங்கிரஸ்காரர் அல்ல,   ஒடுக்கப்பட்ட மக்களுக்காக  குரல் கொடுத்ததினால்,   வாய்பேச  மறந்திருந்த  மக்களுக்கு,   உரிமை பற்றி  குரல்கொடுக்க  எடுத்துச்சொல்லி,  போராடி  காண்பித்து,  போராட  வழி  சொல்லிக்கொடுத்ததால்,  நாடு  கடத்தப்பட்டு,  இந்தியா  வந்தார்.  இங்கே  வந்ததும்  காங்கிரஸ்சில்  சேரச்சொன்னார்கள்,  அவர் சேரவில்லை.   அன்றய  காங்கிரஸ்காரர்களின்  வாயில் ஹிந்தி,   நடையுடை  செயல்பாடுகளெல்லாம்  ஆங்கிலேயர்கள்   போல்தான்.

                           அன்றும்  ஆர்.எஸ்.எஸ்., ஜனசக்தி, முஸ்லிம் லீக்  இன்னும் இதர பல கட்சிகள் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு லட்சம்  உலமாகளை  கொன்று  குவித்ததால்  தேவ்பந்த்  மதரசா உருவானது.  மிகச்சிறந்த  சூபிகலான உலமாக்கள்  சுதந்திரப்போராட்டத்தில்  ஈடுபட்டு  பல்லாண்டுகள்  சிறை  தண்டனை  பெற்று சிறையில்  வாடி இருக்கிறார்கள்.  எல்லா  உலமாக்களும்  முஸ்லிம் லீகில் இருந்தார்களா  என்றால் அதுவும் இல்லை.

                           எல்லா முஸ்லிம்களும் முஸ்லிம் லீகில் இல்லை, எல்லா  இந்துக்களும்  ஆர்.எஸ்.எஸ்.ல், ஜனசக்தியில் இல்லை. காந்தியின்  எளிமையான  தோற்றமும்,  எளிய மக்களை பற்றிய பரிவான பேச்சும்  மக்களை கவர்ந்தது.  அவருடைய  ஒளிவுமறைவற்ற, சுயவாழ்வும்,  பல கோடி மக்களை,  மதத்தால் மொழியால் வேறுபட்டவர்களை, அவர்  சொல் கேட்கவைத்தது. காங்கிரசின் மேடைகளில் அவர் பேசிய பேச்சு அவரை காங்கிரச்காரர் ஆக்கியது.  இன்றும் காங்கிரசில்  பலதரப்பட்ட இன மக்கள் இருப்பதற்கு  அதுதான் காரணம்.

                           ஆர்.எஸ். எஸ். அபிமானி  நரசிம்ம ராவ் காலத்தில் இந்தியாவிற்கு விளைந்த ஒரே நன்மை,  மன்மோகன் சிங்  என்ற  மேதையை  இந்தியாவிற்கு  அறிமுகப்படுத்தியது  தான்.  இந்திய  ரிசர்வு  வங்கியில்  இருந்த  பல டன் தங்கத்தை,  மொரார்ஜி  தேசாய்  அடகு  வைத்ததை  திருப்பி கொண்டுவந்தது மட்டுமல்லாமல்,  இன்று  பல்லாயிரம் கோடி அந்நிய செலாவணி கையிருப்பிற்கு அவர் அடிகாலிட்டது  தான்  காரணம்.  முதன் முதலில்  நிதி மந்திரியானதும்,  இந்திய மக்களிடம்  இந்த பட்ஜெட் கடுமையானதாகத்தான்  இருக்கும் ,  இந்த உங்கள்  தியாகத்தின் பலன் ஐந்தண்டுகளுக்குப்பின் தான் தெரியும்  என்று சொல்லி சாதித்துக்காட்டியவர்.  அவர் சொல் வீரர் அல்ல, செயல் வீரர்.  அவர்  நிதித்துறையில் இருந்து,  இந்திய பிரதமர் ஆனது  நாட்டின் துரதிஷ்டம்.

                              பெயரே  தெரியாமல் இருந்த பி.ஜி.பி.யை  நாட்டிற்கு அறிமுகம் செய்த,  கட்டுக்கடங்கா சக்திமிக்க குதிரை அத்வானியை அரசு என்ற வண்டியில் பூட்டி,  லகான் யார்கையில்  போனது.  இந்த மோடிக்குதிரை  என்னவாகுமென்று  பொறுத்திருந்து பார்ப்போம்.

                              ஊழல் பணம்  என்பது , பெரிய தொழில் அதிபர்கள்,  தமக்கு  ஆகவேண்டிய காரியங்களை சாதித்துக்கொள்ள,  தமக்கு  சாதகமான விசயங்களை செய்துகொள்ள,  சம்மந்தப்பட்ட அனுமதிகளை  பெற்றுக்கொள்ள,  அனுமதி கொடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் பணம்.  எவன் வந்தாலும்  இதைத்தான் செய்யப்போகிறான்.  இது ஒரு கூட்டுக்கொள்ளை,  வெளியே சத்தம்போட்டு சொல்லிக்கொண்டே இருக்காமல் இருக்க  எல்லோருக்கும் கட்டிங்.  காசு கொடுத்தவன்,  போட்ட காசை  எடுக்கத்தான்  பார்ப்பான்,  சம்மந்தப்பட்ட  சாமான்களின் விலையை  ஏற்றுவான்.  இதை தடுக்க ஒரே வழி, அதிகாரத்தை பரவலாக்குவதும், தனி போர்ட் அமைத்து புப்ளிக்காக காண்ட்ராக்ட் கொடுப்பதும் தான். மீறி கொள்ளை அடிப்பவனின் சொத்தை பறிமுதல் செய்வதும், அப்பீல் செய்ய முடியாத நீண்ட கால ஜெயில் தண்டனையும் தான்.  சிலர், ஒன்றும் அறியா பாமர ஜனங்களின் வயிற்றில் அடித்து கோடி கோடியாய் சேர்த்து, பிடிபட்டு தண்டனை கிடைத்ததும்,  நான் வயதானவன் என்னை விட்டுவிடுங்கள் கெஞ்சுவது  மெகா ஜோக்.        
                 
                    பாக்கிஸ்தான், மெலிந்து , உருக்குழைந்து  போய் இருக்கிறது.  கையில் காசு  கையிருப்பில்லை, பின்லாடனை பிடித்துதருகிறென் பேர்வழி என்று அமெரிக்காவை ஏமாற்றி பணம் பறித்தது.  சிரியாவில் உள்நாட்டு போருக்கு,  யுத்த தளவாடங்கள்  வாங்குவதற்கு   பினாமியாக செயல்பட்டு,  காசடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.  போர் என்று வந்தால்  இரு நாடுகளுக்கும்  மிகப்பெரும் நஷ்டம்.  பாகிஸ்தானால் எழுந்து நிற்கவே  முடியாது.  இந்தியா இன்னுமொரு பத்து, பதினைந்து  ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும். இன்றைக்கு இருக்கிற நிலையில் சீனா ஒன்றும் செய்யாது.  யார்  ஆட்சிக்கு வந்தாலும்  இலங்கையை  ஒன்றும் கேட்கமாட்டார்கள்.  ஆரம்ப காலங்களில்  எம். ஜி. ராமச்சந்திரன்  இலங்கை போராளிகளுக்கு  ஆதரவளித்து,  தமிழக  கடற்கரை  பகுதிகளில்  இடமளித்தபோது,  இலங்கை அதிபர், அமெரிக்க அதிபரை சந்தித்து,  இந்தியாவிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள், அதற்கு பிரதிஉதவியாக,  அமேரிக்கா  இராணுவ தளம் அமைக்க,  நெப்போலியனால்  இராணுவத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த இடம் என்று சொல்லப்பட்ட  திரிகோணமலையை தருவதாக சொல்லி காப்பாற்றிக்கொண்டார். அந்த நேரத்தில் ஒரு இந்திய தளபதி கூட, இந்தியா நினைத்தால் மூன்று மணி நேரத்தில் இலங்கையை நசுக்கிவிடுவோம் என்று சொன்னார்.  இன்றும் அதே நிலை தான். இந்தியா  இலங்கைக்கு எதராக ஏதாவது செய்தால்,  இந்திய துணை கண்டத்திற்கே ஆபத்துத்தான்.

                    காங்கிரசுக்காவது  பாதுகாப்பு என்ற எண்ணத்தில் முஸ்லிம் ஒட்டு விழ வாய்ப்புண்டு,  மோடிக்கு விழும் என்று எதிர் பார்க்கிற ஒட்டு கூட்டாளிகளின் " புகழால் "  விழாது. வேறு வழி இல்லையென்று  இரு திராவிட கட்சிகளுக்கும் விழத்தான் வாய்ப்பு அதிகம்.

                      இன்றைய  இளைஞர்கள்  விரக்தியில் இருக்கிறார்கள்,   கல்லூரியில்,  கல்வி ஸ்தாபனங்களில்  இருந்து  கனவுகளுடன் வெளி வருகிறார்கள்.   அவைகள் அவர்களை தொழிலுக்கு தகுதியானவர்களாக  உருவாக்கவில்லை.  வெளியே வந்ததும்  தான் கனவு கலைகிறது,  பெற்ற பட்டம்,  வெறும் "  பட்டம் " தான்  என்று உணர்கிறார்கள். சுய பச்சாதாபம்  பல வார்த்தைகளை வெளியாக்குகிறது.  நம் நாட்டில் வேலை இல்லாமல் இல்லை, வேலைக்கு தகுதியானவர்கள் தான் இல்லை. 

                       இந்திரா போன்ற ஒரு தொலை நோக்கு உள்ள தலைவர் யாரும் இல்லை.  எமர்ஜென்சி வந்ததே யார் பாதிக்கப்பட்டது? நீங்களும், நானுமா ?. அரசியல் வாதிகள் தானே.  இன்று பயமற்று எதை வேண்டுமானாலும்  செய்யலாம் என்று இருப்பவர்கள் தானே,  பயந்தார்கள், பாதிக்கப்பட்டார்கள். எமர்ஜென்சி  காலம் தவிர  வேறு எப்போழுதாவது  இந்தியாவில் ரயில், பஸ் சரியான நேரத்தில் இயங்கியது உண்டா?,  அரசு அலுவலகங்களில் வேலை நேரத்தில்,  நாற்காலிகள்  காலியாக கிடக்குமா?   எல்லோருக்கும்  பயம். நமக்கு சுதந்திரம் தப்பான நேரத்தில் கிடைத்துவிட்டது.  காலம், காலமாக  பிறர் சொல்லி சொல்லியே காரியம் செய்ததால்,  இன்று நம் கடமையை செய்யக்கூட,  தார் குச்சியுடன்  ஒரு ஆள் பின்னே இருக்க வேண்டி இருக்கிறது.

                      இளைஞர்களின்  இரத்தம்  சூடானது தான்,  ஹிந்தி வேண்டாம் என்று சொன்ன கால கட்ட இளைஞர்களின்  பார்வை தூரம் தமிழக எல்லைக்குள் தான்,  படிப்பறிவும் குறைவு. இன்று தொழில் நுட்ப புரட்சி, இளைஞர்களின் பார்வை தூரத்தை பல நாட்டு எல்லைகளை கடந்து எடுத்து சென்று  இருக்கிறது.  சிந்திக்க தூண்டி இருக்கிறது.  இன்று யாரும் கேப்பையில் நெய் வடிகிறதென்றால்,   பேசாமல் இருக்க மாட்டான், உலகத்தில் எங்காவது ஒரு மூலையில், வடியும் வடியாது என்று ஆராய்ச்சி செய்து சொல்லியிருப்பான்,  அதன் முடிவைத்தான் நம்புவான்.

                   நாட்டில் தொழில் வளர வேண்டும் என்றால்,  வேலை வாய்ப்பு பெருக வேண்டும் என்றால். இடவசதி வேண்டும், எங்கே போவார்கள்?, வியாபாரிகள், தொழில் அதிபர்கள் விலை குறைவாக எங்கே கிடைக்கிறதோ? அங்கே தான் போவார்கள்.  தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்க மாட்டேன் என்றால்,  தமிழ் நாட்டு கெதி தான். ஒருசில  அரசியல் குடும்பங்களே, நாட்டையே பங்கு போட்டு எடுத்துக்கொள்வார்கள்,  அதுவும் காசே கொடுக்காமல். அடுத்தடுத்த தலைமுறையில் சிறு,சிறு சமஸ்தானங்கள் தான் மிஞ்சும்.

                          மோடி ஒரு மத வெறியன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழில் துறைக்கு மோடி, செய்ததாக சொல்லியிருப்பது உண்மையானால் வரவேர்கப்படக்கூடியதே.

                           குஜராத் எங்கே இருக்கிறது?  இந்தியாவிலே தானே, மோடி முஸ்லிம்களை கொன்று குவித்தபோது," நர "சிம்ம ராவின் மத்திய காங்கிரஸ் அரசு என்ன செய்துகொண்டிருந்தது?. ராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது?. " நர "ராவோடு  ஒப்பிடும்போது  மோடி நம்பிக்கைக்கு உரியவர் தான்.

                          எல்லா அரசியல்வாதிகளும்  சிறந்த நடிகர்கள்,  மகா பொய்யர்கள்.   எந்த மதவாத அமைப்புகளெல்லாம் காந்தியை கொன்றனவோ,  அதில் உள்ளவனெல்லாம் காந்தியவாதி என்று சொல்லிக்கொள்கிறான். காந்திக்கு பிறகு பிறந்தவன்,  காந்தியையே பார்க்காதவன், காந்தி தொப்பி போட்டுக்கொண்டு,  காந்தியின் சீடன் என்கிறான்.  நம்மை பார்த்து தைரியமாக மேடையேறி,  மாங்கா மடையர்களே என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு, பொய்க்கு மேல் பொய் சொல்லுகிறான்.  இன்னும் சில காலத்தில் மோடியும் கற்றுக் கொள்ளுவார்.

                         மோடி  பொண்டாட்டியை  விட்டுப்போன்திற்கு ஆன்மிகம் காரணமல்ல, ஆர்.எஸ். எஸ்.இல்  பொறுப்புடைய பதவி வேண்டும் என்றால் கலியானமாகமல் இருக்க வேண்டும். தீவிரவாதி குடும்பம் இல்லாதவனாக இருந்தால் தான் ரகசியம் காப்பாற்றப்படும்.

                          .அராஜக ஆட்சி நடந்திருக்கிறது, ஐ. எ.எஸ். அதிகாரிகள், பழி வாங்கப்பட்டிருக்கிரார்கள்  மத்திய அரசு என்ன செய்தது என்று புரியா புதிராய் இருக்கிறது.

                           ஒரு கதம்ப அரசோ, தப்பித்தவறி மெஜொரிடியொ கிடைத்துவிட்டால் யார் பிரதமர்?.  கட்சித்தலைவர்  இன்றும் மாதம் மூன்று முறை  வாஜ்பாயை சந்திக்கிறார்!!!!!!!!,  என்ன ரகசியமோ?

                           

                                
                   
                              

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........