Tuesday, April 29, 2014

சாதனைக்குதிரைகள் இலக்கை எட்டியபோது


                                    எனக்கு எப்போதுமே இருக்கிறதை விட்டுட்டு  பறக்கிறதை பிடிக்கிறது  தான் பழக்கம்.  சும்மா, நெட்லே  பாத்துக்கிட்டு இருந்தேன்,  so and so  நைஜீரியான்னு  இருந்திச்சு.  அடடே,  வெளி நாட்லெ இருக்கிற மனுசனாட்செ,  காசு, பணம், துட்டு,  சம்பாரிக்கிற மாதிரி,   ஏதாவது  நல்லது,  பொல்லாது  எழுதுவாரோன்னு  போய் பர்ர்த்தேன்,  சூடப்புன்னு போச்சு.  ஆனாலும்  என்னை,  பழங்கணக்கை  புரட்டச்சொல்ற மாதரி,  சில விஷயங்கள் எழுதி இருந்தார்............  நீங்களும்  பாருங்களேன்.

            "  x " ," y " அப்பிடின்னு  ரெண்டு  பேருங்க, x கும்  y  கும்   எடையிலையாவ்து கொஞ்சம்  இடைவெளி இருக்குங்க,  ஆனா  இந்த நம்ம  பார்டிங்கலுக்கு  எடையிலே  அப்படி ஒரு நெருக்கம்.  வெளிநாட்லே பல வருஷம் இருந்ததாலே,  சாப்பாடலே இருந்து  மற்ற எந்த விசயமாய் இருந்தாலும்,  எல்லாமே  மணி அடித்தது  மாதிரி,
அந்தந்த  குறிப்பிட்ட நேரந்தான்.  இதிலே  நம்ம  X  கொஞ்சம் அதிகம்,    அதாங்க நம்ம    " பீட்டர் "   ன்னு சொல்லமாட்டம்.          இதை கேட்டிங்கன்னா    " பீட்டரை "  பத்தி  நல்லா தெரிஞ்சுக்கலாம்,   ரிடையர்  ஆகிற காலத்திலேயே  வருசா,  வருஷம்  அமரிக்கா,  ஐரோப்பன்னு, உலக டூர்  போறது வழக்கம்,  ஒருமுறை  அப்படி போகும்போது  ஜெனிவா ஏர் போர்ட்லே உள்ள  " எக்சிட் டோர் ஓபன் ஆகலேன்னு,  எட்டி ஒதைச்சு  ஓடைச்சுப்புட்டார்.  பிறகு  தானா போய்,  நான்தான்  கதவை   ஓடச்சேன்   என்று சொல்லி,  அதை சரி பண்றதுக்கு  செலவாகப்போற,   டாலரை  கட்டிட்டு  வந்தார்.  அப்பவெல்லாம்  பாரின் எக்சேஞ்  வாங்கிட்டு  போற யாரும்,  ரிசர்வ்  பேன்க் லே டாலரை  திருப்பி கொடுக்கிறது இல்லை,  ( இப்ப மட்டும் என்ன வாழுதுன்னு ?  கேட்காதீங்க )  நம்ம  பர்ர்டி மிச்சம் இருக்கிற டாலரை  அப்படியே  திருப்பி கட்டிடுவார்.
                          வெளி நாட்லெ, பல் வருஷம்  இருந்து, அங்கே எப்படி,  எப்படி எல்லாம் சம்பாதிக்கிறார்கல் என்று,  பார்த்து, பர்ர்த்து  எல்லாருக்கும்  ஏதாவது  பிசினஸ் நம்மளும்  செய்யநும் என்று  ஆசை வரும்,  அது மாதிரி, X  கும்  Y  கும்  ஆசை வந்து,  சரி ஊர்ல போய கம்பனி ஆரம்பிப்போம் என்று சொல்லி,   சென்னப்பட்டணம்  வந்தாங்க.  அதிகமா அழியிற பொருள்தான்  ஏற்றுமதிக்கு ஏற்றது.  அப்படி பார்த்தால் உணவுப்பொருள் தான்,  அந்தக்காலகட்டத்தில்  அதற்கு வாய்ப்பு இல்லை.   அடுத்தது  துணி,  ரெடி மேடு , கைலி வெளிநாட்டுக்கு  அனுப்ப ஆரம்பித்தார்கள்.

                            ஆர்டர் எடுப்பது,  கடித போக்குவரத்து  இத்யாதிகளின்  பொறுப்பு  க்கு.   உள்நாட்டு  விவகாரங்கள் எல்லாம்  Y  க்கு  என்று  பொறுப்பை  பிரித்துக்கொண்டு,  மிகசிறந்த  முறையில்  கம்பனியை  வளரச்செயதார்கள்.  நம்ம நாட்டு  விவகாரந்தான்  நமக்கு தெரியுமே, எந்த காரியமும் சொன்ன நேரத்துக்கு  நடக்காது,  வெளியே சென்று எத்தனை  மணிக்கு  திரும்பி வந்தாலும்,  சாப்பிடாமல் காத்திருப்பார்.  Y  யும்  எதையும்  சாப்பிடாமலேயே  வந்து,   இருவரும்  எத்தனை மணியானாலும் ஒன்றாக  அமர்ந்து தான் சாப்பிடுவார்கள்.  ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, கிட்டத்தட்ட  25, 30  வருடங்கள்!.   அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் எல்லாம்  வியாபாரம் செய்யும் அளவிற்கு வளர்ந்த பின்பும்,  ஆர்டர் களிலெல்லாம்  Attention  Mr X  என்று தான் வரும்.

                           காலம் ரெக்கைகட்டி  பறந்தது,  கடைசிவரை  X  மணம் முடிக்கவே இல்லை.  Y  மணம் முடித்து  பல குழந்தைகளுக்கு  தந்தையானார். ஐம்பதுகளை நெருங்குகின்ற நேரத்திலும், நண்பர்களின்  நெருக்கத்திற்கு எந்தக்குறைவும் இல்லை. ஒரு இலக்கு வைத்து, ஒன்றாய் உழைக்கும் போது, இலக்கை தவிர வேறு நினைப்பே இல்லாமல் உழைக்கும்  போது,  சில்லறை  சிந்தனைகள் வராமலும், வந்தாலும் பொருட்படுத்தாமலும் இருந்தால்,  யாராலும்  வெற்றிக்கனியை  பறிக்கமுடியும்.  இலக்கு  இல்லாமல்  " சும்மா "
இருந்தால், சாதாரண  விசயங்களெல்லாம்,  அசாதாரண  அந்தஸ்தை பெற்றுவிடும்,  எல்லாமே  தீர்வே இல்லாத ( ? ) பிரச்னை ஆகிவிடும்.
 
                           குடும்பியான  Y ,  ஒரு கால கட்டத்தில்,  இரண்டொரு மாதத்தில் தருவதாக சொல்லி,  பணம் கைமாற்று  கேட்க,  X  கொடுத்தார். கெடு முடிந்து சில காலமாகியது, பணம் வரவில்லை,

  X :   என்னப்பா  நான் கொடுத்த பணம் என்னாச்சு ?
 Y :    நீ  என்னடா  பிள்ளை குட்டிக்கரனா ?  உனக்கென்ன  அவசரம் ?
 X :  எனக்கு பிள்ளை குட்டி இல்லை என்றால்  திருப்பி தர மாட்டியா ?

இன்னும்  இத்யாதி,  இத்யாதிகள், விருட்டென்று  வெளியே சென்றவர்தான்.  X   அடுத்த நாள் கம்பனிக்கு வரவில்லை. சாதித்து வயது  தளர்ந்தவர்களுக்கு,  சாதனை  செய்ய  இலக்கு இல்லை,  நாளை செய்ய என்ன இருக்கென்று தெரியவில்லை, " சும்மா "  இருந்ததால் வந்தது வினை.

                        கம்பனியை மூடி விடலாம் எற்று இருவருமே  பிடிவாதம் பிடிக்கிறார்கள் !!!!!,  ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க பிடிக்க வில்லை என்கிறார்கள் !!!!. மிக நீண்ட  சமாதான  பேச்சிற்கு பிறகு,  Y  கம்பனி பக்கமே வரக்கூடாது  என்றும்,  தன் கடைசி காலம் வரை கம்பனியிலேயே  இருந்து, Y  யின், குடும்பத்தர்ர்களுக்கு  தொழில் செய்ய உதவுவது என்று முடிவானது.

                         இருவரும் உயிருடன் இருந்தவரை, ஒருவரை, ஒருவர் பார்த்து கொள்ளவே   இல்லை.  எப்பொழுதாவது  Y  கம்பனிக்கு  வருவதாயிருந்தால், X  கம்பனி முடிந்து வெளியே சென்றதும் தான் வருவார்.  இறப்புக்குகூட,  அவரை சென்று பார்க்க வில்லை,

                           இன்றும் அந்த கம்பனி இருக்கிறது,  அந்த சாதனையாளர் களுக்கு என்ன நேர்ந்தது ?  உங்களால்  புரிந்து கொள்ள முடிகிறதா ?

                          
                    

1 comment:

  1. /இலக்கை தவிர வேறு நினைப்பே இல்லாமல் உழைக்கும் போது, சில்லறை சிந்தனைகள் வராமலும், வந்தாலும் பொருட்படுத்தாமலும் இருந்தால், யாராலும் வெற்றிக்கனியை பறிக்கமுடியும். இலக்கு இல்லாமல் " சும்மா "
    இருந்தால், சாதாரண விசயங்களெல்லாம், அசாதாரண அந்தஸ்தை பெற்றுவிடும், எல்லாமே தீர்வே இல்லாத ( ? ) பிரச்னை ஆகிவிடும். /

    Super

    ReplyDelete

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........