Tuesday, April 15, 2014

ப்ல்லிலாத, உடல தளர்ந்த, தொண்ணூற்று ஐந்து வயது இளைஞர்

நாமெல்லாம் 95 வயதில் என்ன செய்வோமோ ?.  நிச்சயமாக இவர்போல், நாட்டை பற்றி கவலைப்பட்டுக்கொண்டு அலையமாட்டொம்  என்பது மட்டும் நிச்சயம்.
                     அலிகர் நகரை சேர்ந்த இவர், அப்பாஸ் அலி, நேதாஜியின்  ஐ.என்.எ. இல் கேப்டனாக இருந்தவர். இன்றும் உயிருடன் இருக்கும் நேதாஜி படையை சேர்ந்த ஒரு  சிலரில் இவரும்  ஒருவர்.
                      2011 இல் அண்ணா ஹஜாரேயும், கேஜ்ரிவாலும், ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கத்தை ஆரம்பித்த போது,  நானும் அதில் போய் சேரப்போகிறேன் என்று கிளம்பியபோது, அவருக்கு தெரிந்த  இமாம் ஒருவர், கேஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ். காரர் என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு, இவர் ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்குவார்   என்றால்,  நான் டெல்லி என்ன, எங்கு வேண்டுமானாலும் போவேன்,   சாத்தானுடன்  வேண்டுமானாலும் சேருவேன் என்று பதில் சொல்லி இருக்கிறார். 

                     இத்தனை காலங்களுக்கு பிறகு, நாடு முழுக்க மலிந்திருக்கிற  ஊழழை பற்றி விளாவாரியாக கேஜ்ரிவால் சாடுவதாகவும்,  ரிலையன்ஸ் அம்பானி போன்ற பெரிய, பெரிய தொழில் அதிபர்களெல்லாம்,  காங்கிரசையும்,  பி. ஜி.பி.யையும்  தங்களது  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக,  தான் கருதுவதாகவும்,  தான்  முழுக்க, முழுக்க  கேஜ்ரிவால் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.

                      கேஜ்ரிவாளின் ஆம் ஆத்மி குறைந்தது,   ஐம்பது  சீட்டுக்கலாவது பெற வேண்டும் ,  பெற்றால், நாட்டின் தலைவிதியே மாறிவிடும்  என்றும்,  போஸ் மற்றும் அரசியல் சீர்திருத்தவாதி ராம் மனோகர்  லோகியா  போன்றவர்களின்  கூட்டு பிம்பமாக கேஜ்ரிவாலை காண்பதாக சொல்கிறார்.

                     இன்றைக்கு போஸ் உயிரோடு இருந்திருந்தால், கேஜ்ரிவாளைதான் ஆதரித்திருப்பார்.  நாட்டின் முதல் பிரதமராக போஸ் தான் வந்திருக்கவேண்டும்,  அவர் மக்களுக்காகவே வாழ்ந்தார்,  ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையில் இருக்கும்  இவ்வளவு  பெரிய இடைவெளிக்கு காரணமான அரசின் கொள்கைகளை ஆதரித்து இருக்க மாட்டார் என்கிறார்.

                     கேப்டன் அப்பாஸ் அலியிடம்,  உங்கள் காலத்து அரசியல் வாதிகளையும்  தற்காலத்தவர்களையும் ஒப்பீடு செய்யுங்கள் என்றதற்கு,  மக்களுக்கும்  அவர்களுக்கும் உள்ள இடைவெளி என்றும் தான் அதைக்  கண்டு வெறுப்பதாக சொல்கிறார்.

                     தேஷ் கா நேதா ஹவா மென் நஹீன் ஜமீன் பெ ஹோதா ஹை ((தலைவன் என்பவன்  ஆகாயத்தில் இருப்பதில்லை,  தரையில் தான் இருப்பான் )   இன்றைக்கு,  எங்கு போகவேண்டும் என்றாலும், ஹெலிகொப்டரில் தான் போகிறார்கள் !  யார் இவர்களுக்கு இதற்கு  பணம் கொடுப்பது,  பறந்து போய் என்ன செய்கிறார்கள் ?  ஆகாசத்தில் என்ன கோட்டையா கட்டப்போகிறார்கள்?,  கேட்கிறார்.

                     நான் ஆங்கிலேயருடன் போராடினேன், ஐ.என்.எ.வில் பணி ஆற்றினேன்.  இருந்தும் என்னை இந்திரா காந்தி, ரயில்வே சிக்னலை மரி த்தேன்   என்று இல்லாததை சொல்லி,  இரண்டு வருடம் மிசா காலத்தில்,  ஜெயிலில் போட்டார்  என்று தன ஆதங்கத்தை சொல்லி பெருமூச்சு விட்டாலும் , நேதாஜி,லோகியா, எலக்சன், கேஜ்ரிவால்  என்று  உச்சரித்தாலே இளமை யுணர்ச்சியுடன், புது ரத்தம் பாய்வது போல் காணப்படுகிறார்.

                    நாட்டில் உள்ள முஸ்லிம்களின் நிலைமையை நினைத்து  அவர்  கவலைப்படுவதாக தெரிகிறது.  இந்திய முஸ்லிம்கள் மிக சக்தி வாய்ந்த வாக்காளர்கள் என்று சொல்லி, தொடர்ந்து,  இந்தியாவில் இருக்கிற 20 கோடி முஸ்லிம்களுக்கு எதிரான  அரசு மத்தியில் இருக்கவே முடியாது என்கிறார். அவர்கள் தங்கள்  சக்தியை உணர்ந்து,  கவனமாக வாக்களிக்க வேண்டும். இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைமைக்கு ஒரு முக்கிய காரணம்,  சரியான பிரதிநிதித்துவம் இல்லாததுதான்  என்கிறார்.

                   கடைசியாக, முஸ்லிம்களுக்கென்று குரல் கொடுத்தவர், முஸ்லிம் மஜ்லிஸ் பார்டி என்ற,  உ.பி. யை தலைமை இடமாக கொண்ட,  இயக்க  நிறுவன தலைவர்  டாக்டர். அப்துல் ஜலீல் பரிடி,  அவருக்குப்பின், அவர் போன்ற ஒரு தலைவர் முஸ்லிம்களுக்கு அமையவில்லை என்கிறார்.

நன்றி:டைம்ஸ் ஆப் இந்தியா,மார்ச் 26' 14

                    

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........