Wednesday, June 3, 2015

சிறந்த முஸ்லிமாயிருக்க சீரிய வழி மூன்று

அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்

             மிக விரைவில் முபாரக்கான மாதமான ரமலான் நம்மிடையே வரப்போகிறது. வந்தும்  போனது,  சென்ற காலங்களில் நம்மிடையே  என்ன மாற்றங்களை  உண்டாகியது. கடந்த காலங்ககளில் இருந்ததை  விட  எந்த வகையில்  மேலான  முஸ்லிமாக, முமினாக ஆகியிருக்கிறோம். என்று  நமக்கு நாமே  கேள்வி கேட்டுக்கொண்டோமானால்,  நம்மில் எத்துனை பேர் "அல்ஹம்துலில்லாஹ் "என்று சொல்லக்கூடியவர்களாக  இருப்போம்.  கீழே உள்ள வீடியோவை  காணுங்கள்.கீழே தமிழாக்க

முதிர்ந்த  முஸ்லிம்களாய்  இருக்கிற நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ?.  இந்த ரமலானுக்கும் அடுத்த ராமலனுக்கும் இடையில்,  அல்லது இந்த திசம்பருக்கும் அடுத்த திசன்பருக்கும் இடையில், அல்லது  இந்த குளிர் காலத்திற்கும் அடுத்த குளிர் காலத்திற்கும் இடையில்,  என்ன  செய்தால்  நான் இன்னும் சிறந்த முஸ்லிமாக ஆக முடியும்.  நான் ஒரு மூன்று விசயங்களை  சுட்டிக்காட்டப்போகிறேன்,  இதை நம் முன்னேற்றத்தை அளக்கக்கூடிய  ஒரு அளவீடாக கொள்ளலாம். முதலாவது  இபாதத்,  நம்முடைய  பஜர் சரியாக இருக்கிறதா? நமது முக்கிய கவனம் தொழுகை,  பஜர் மற்றும் இஷா சரியான நேரத்தில் ஜமாத்துடன் தொழுதோமா?. நம்மை பள்ளிக்கு அழைத்து  செல்பவர் கூட தொடர்ந்து  செல்கிறோமா?,  ஒரு இலக்கை,  ஒரு காலக்கெடு  வைத்து தொடர்ந்து செய்யச்செய்ய, பழக்கத்துக்கு வந்துவிடும்.  பஜர்  சரியாக வேண்டுமானால், இளைஞர்களே ! காலாகாலத்திலே  உறங்க செல்லவேண்டும்,  ஒரு விஷயம்  சொல்கிறேன்  காலாகாலத்த்தில் உறங்கி பஜருக்கு எழும்பவில்லையானால், வாழ்கையில் ஒன்றுமே சாதிக்க முடியாது. மார்கத்தை பற்றி  10  11 மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு  மறுநாள் பஜருக்கு  10 மணிக்கு எழுந்தால்  என்ன பலன்.
சமுதாயத்தை மாற்றப்போகிறோம் என்று சொல்லி இரவு 11 மணி வரை பேசினால் மற்றம் வராது, நம்மை,  நம்முடைய தொழுகையை. குரான் உடனான நம்முடைய  தொடர்பை சரி செய்ய முடிய வில்லை. நம்முடைய தினசரி இஸ்லாமிய கடமைகளை சரியாக்கி கொள்ள இயல வில்லை,  நம்மால் எங்கிருந்து சமுதாயத்தில் மற்றம் கொண்டுவர  முடியும்?.
        சுபுஹுக்கு எழுங்கள், குரானுடன் தொடர்பை அதிகரித்துக்கொள்ளுங்கள்  பாஜருக்குபிறகு குரான் ஓதுவதை வ்ழக்கமாக்கி கொள்ளுங்கள். நாட்களில், மாதங்களில், மாற்றத்தை கொண்டுவாருங்கள்.வாழ்கையில் மாற்றம் வரும்  எதிர்காலத்தை பற்றி கனவு  காண்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்,  வாழ்கையின் முன்னேற்றம், முன்மாதிரி, குர்ஆனில் இருந்து வரும்,  அதற்கு  குரான் மனத்தில் இருக்க வேண்டும். குரானை மனனமிட செயல் திட்டத்தை  உருவாக்கிகொள்ளுங்கள். தினமும் குரானை ஓதுங்கள், முடிந்த வரை  சிறுக சிறுக தினமும் மனனம் செய்யுங்கள். ஒன்று நான் உறுதியாக சொல்கிறேன், ஒருமுறை செய்ய ஆரம்பித்து பாருங்கள், ஒரு வாரத்திலேயே  உங்களால் வித்தியாசத்தை உணரமுடியும்,  நாட்கள் பரக்கத்தால் நிரம்பியிருக்கும்.நிறைய சாதித்து இருப்பீர்கள், திறக்காத கதவுகல் திறக்கும், வாய்ப்புக்கள் நாற்புறம் இருந்தும் வரும்,மனதில் சந்தோசமும் சந்துஷ்டியும் பெருகும். இவை எல்லாவற்றையும் அல்லாஹ் தருவான். வேறு எதனாலும் தர முடியாததை  குரானுடைய தொடபு நமக்கு ஆக்கித்தரும்.
                   நான் ஆரம்பத்தில் எத்தனை விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்னேன்?.......... மூன்று  விஷயங்கள்,  ஒன்று இபாதத், வணக்கம், வழிபாடு.  அடுத்து  நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயம், மேம்படுத்திக்கொள்ள வேண்டிய விஷயம்  இல்ம், மார்க்க அறிவு.  நான்  இங்கே  இபாதத்தையும்,  மார்க்க அறிவையும்  பிரித்திருக்கிறேன் காரணம், சிலர்  தப்சீர் மற்றும் தஜ்வீத் விசயங்களில் சிறந்தவர்களாய் இருக்கிறார்கள், ஆனால் இபாதத் களில் சோடை போய்விடுகிறார்கள். கூடுதலான இல்ம் இருந்து அமல் இலையென்றால் என்ன பிரயோஜனம். அதனால் தான் நான் முதலில் இபாதத்தையும் பிறகு இல்மையும் பேசுகிறேன். இல்ம் என்று சொல்லும் பொது,  உங்களை ஆலிம் அல்லது முப்தி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை,ஷரியா சட்டங்களை படித்து பட்டம் வாங்குங்கள் என்று சொல்லவில்லை, ஆக  வேண்டும் என்பவர்களுக்கு வாழ்த்துக்கள். இங்கிருக்கிற பெரும்பாலோர் இஸ்லாமிய அறிவு பெற்ற.முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான். அதற்க்கு  நீங்கள் கடந்த காலங்களில்,  சீறா, ( நபிசல்லலாஹு அலைஹிவசல்லம் அவர்களுடைய  வாழ்கை வரலாறு ) படித்திருப்பீர்கள், வருடாவருடம் தொடர்ந்து படியுங்கள், பல்வேறு  பதிப்பகங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்,  அனைத்தையும் வாங்கி படியுங்கள், மனதில் இருத்துங்கள். அம்மாமனிதரின் வாழ்கையில்  தான் நமக்கான முன்மாதிரி, வழிகாட்டல் இருக்கிறது.எந்த பதிப்பகத்தின்  பதிப்பை படிக்க என்று கேட்காதீர்கள்,  வருடத்திற்கு ஒன்றாக, தொடர்ந்து படித்துக்கொண்டே இருங்கள். சீராவை படித்துக்கொடிருக்கிற அதே நேரத்தில்,  குரானிய  அறிவையும்  போதுமான அளவு  வளர்த்துக்கொண்டே இருக்க  வேண்டும். உதாரணத்திற்கு  எடுத்துக்கொள்ளுங்கள்,  சூரத்துல் கஹ்ப்  இந்த வருடம் மனனம் செய்ய வேண்டும், அதன் கூடவே  தப்சீர், தெரிந்து கொள்ள வேண்டும், இந்த சூரா சம்மந்தமாக கிடைக்கிற எல்லா விசயங்களையும் தெரிந்து கொள்ளுதல், முக்கியமாக  மனதில்  நிற்கிற அரபி சொற்களுக்கு  பொருள் அறிந்து கொள்ளுதல்.  அடுத்த வருடம் சூரயேரஹ்மான், அதற்கடுத்த வருடம்  சூரத்துல் பகரா, எனக்கு சொல்லத்தெரியவில்லை வேறு எபத சூரா வாகவும் இருக்கலாம். இங்கொன்றும், அங்கொன்றுமாக இல்லாமல்  ஒருமித்த கவனத்தோடு  ஒவ்வொன்றாக செய்யுங்கள். வருடந்தோறும் சொல்லிக்கொல்லுமளவுக்கு இல்மை வளர்த்துக்கொள்ளுங்கள். சமீபத்தில்  ஒரு மாணவர் கேட்டார்,  நீங்கள் எதனை முக்கியமென்று நினைக்கிறீர்கள்,  மனப்பாடம் செய்வதையா ?  பொருள் அறிந்து கொள்வதையா?. 
பொருளுணர்ந்து திரும்பத்திரும்ப  ஓதும் பொது, அல்லாஹ் சிந்தனையில்  ஆயாதுக்களின். சாதாரணமாக விளங்காத விசயங்களுக்கு விளக்கம் கிடைக்க செய்வான். திரும்ப திரும்ப 10 முறை ஓதி விளங்கி கொள்கிற விசயத்திற்கும், ஓரிரு முறை ஓதி விளங்குவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
        இறைவன்மீதானையாக. குரான் திரும்ப ஓத ஓத  புதிய புதிய விஷயங்கள் விளங்ககூடியதாய் இருக்கிறது. இப்பொழுது நாம்  இரண்டு செய்திகலை  பார்த்திருக்கிறோம், ஒன்று சீறா மற்றொன்று குரான்,  இதற்குள்ளே ஒரு சின்ன விருப்ப பாடம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்,  துஆ, பெருமானார் கற்றுத்தந்த மூன்று அல்லது நான்கு  துஆக்கள்.  இவைகளை பொருளுணர்ந்து மனனம் செய்து கொள்ளவேண்டியது. இது இல்மையும் அமலையும் ஒருங்கிணைப்பது. நான் சொல்லி இருக்கிற மூன்று விஷயங்கள் அல்லாமல் இன்னும் சிலவும் இருக்கின்றன,  நான் ஏன் இவைகளுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றால் இந்த மூன்றும் உங்களை உடனடியாக சிறந்த முஸ்லிமாக ஆக்ககூடியவை. உங்களுடைய  தொழுகையில் கவனமும் ஈர்ப்பும் கூடும், சீறா  படிப்பதால். பெருமானார் மீது உள்ள பாசம் பெருகும், ஒவ்வொரு முறை சலவாத் சொல்லும்போதும் பாசம் மேலும் மேலும் கூடி, அவர்களுடனான நெருக்கம் கூடும். நீங்கள் கேட்கின்ற துஆ உங்களை அல்லாஹ்வின் அருகாமைக்கு அழைத்துசெல்லும், காரணம்  உங்களுக்கு அல்லாஹ்விடம் என்ன கேட்கிறீர்கள் என்று நன்கு விளங்கும்.
       இபாதத்தையும், இல்மையும் தனி தனியாக சொன்னாலும்  இரண்டும் ஒன்றுகொன்று தொடர்புடையதே. அமல் இல்லாத இல்மினால் எந்த உபயோகமும் இல்லை.

           மூன்றாவது விஷயம் அறப்பணி செய்வது. இது உங்களைப்பொறுத்தது, வாரத்தில் ஒருநாளோ, மாதம் ஒருமுறையோ, மக்களுக்கு, சமுதாயத்துக்கு உதவி செய்ய வேண்டியது. இது முஸ்லிம்களுக்கு மட்டும் தான் செய்யவேண்டும் என்று  இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்,  தாடி வச்ச முஸ்லிம்  கிருஸ்தவர்களுக்கு உதவுகிறார் என்று பெயர் வந்தாலும் சரி. நல்லது செய்தால் யாருக்கு செய்தாலும் சரிதான். முஸ்லிம் ஆர்கனைசேசன் மூலம் தான் என்றில்லாமல், மாற்று மதத்து குழுக்கள் செய்கின்ற சமுதாய சேவையிலும் பங்கேற்றல். நாமும் மற்றவர் துயரங்களில் பங்கு கொள்கிறோம், மாற்று மதத்தவர் உதவுகிறோம் என்ற எண்ணத்தை  மாற்று  மதத்தவர் மனதில் உருவாக்கு மாறு உதவவேண்டும். கூடியவரை பறையடிக்காமல் இருத்தல் நல்லது .

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........