Tuesday, June 9, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் 2


இதற்கு  முந்தய  கட்டுரையில் சில விசயங்களை பகிர்ந்து கொண்டோம், சொத்து  சேரத்தல்  என்ற  சமன்பாட்டை  பார்த்தோமானால்  அதில் வருமானத்தில்  செலவு போக மீதமானதை  சேமிப்பது மட்டுமின்றி, சேமித்ததை,  புத்திசாலிதனமான முறையில் முதலீடு செய்வது  என்று இருக்கும் .

                   நம்மில் பெரும்பாலோர், வருகின்ற வருமானம் செலவிற்கே போதவில்லை, எங்கிருந்து சேமிப்பது ?  என்று கேட்போம்.  அன்றாடம்  காச்சியிலிருந்து,  மாத சம்பளம் வாங்குபவர் வரை, இதே பாட்டுத்தான். இன்றைக்கு பல்வேறு  "பிளாக்கு"களில் பட்ஜெட் போட்டு, செலவுகளை கட்டுப்படுத்தி,  மிச்சப்படுத்தும்  கட்டுரைகளை பலர் எழுதி வருகிறார்கள்,  பல புதிய உத்திகளை அவர்கள் சொல்லியிருப்பதை  காணலாம். உங்களுக்கு பிடித்தமானவைகளை, நீங்களும் பின்பற்றலாம்.  அவைகளையும் படித்தறிந்து கொள்ளுங்கள்.

                     வாங்குகிற  சம்பளத்தில், மிகக்குறைவாக    நூற்றுக்கு  5  இல் இருந்து 10  வரை  மிக எளிதாக சேமிக்கலாம்.  இன்றைக்கு  உலக மகா பணக்காரர்களில்  ஒருவரான  அமெரிக்காவின்  வாறன் பப்பெட்,  சொந்தப்பணம் வெறும் பத்தாயிரம்  டாலருடன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு  சேர்மார்கட்டில்  தொழில் தொடங்கி,  இன்று  அறுபது பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியாய் உள்ளவர்,  சேமிப்புக்கு  வழி இப்படிச்சொல்கிறார்

.

    " வருமானத்தில் செலவு செய்து விட்டு மிஞ்சுவதை சேமிப்பதை விட, சேமிப்புக்கு எடுத்துவிட்டு மிஞ்சுவதை செலவு செய்யுங்கள் "   என்று .


           சிந்தனையை பார்த்தீர்களா?. இன்றைக்கு  சர்வசாதரணமாக,  பெரும்பாலோர்  மிகக்குறைவாக  பார்த்தாலும் பத்தாயிரம்  ரூபாய் சம்பாதிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதில் ஐந்து   பர்சென்ட்  சேமிக்கிறார்கள்  என்று எடுத்துக்கொண்டால் கூட,  மாதம்  ஐநூறு  வருகிறது.  இந்த  ஐந்நூறு  ரூபாயை  வைத்து  எந்தக்காலத்தில்  நாம் சொத்து வாங்குவது  என்று சிலர் எண்ணக்கூடும்,

              தொடர்ந்து  மாதா, மாதம் ஐந்நூறு  என்கிற  இந்த சிறு  தொகை, ஐந்து, பத்து, பதினைந்து  ஆண்டுகளில்(  " கூட்டு வட்டி "        இது  வட்டியில்ல , ஒரு கணக்கீடு,  compound  ) என்ற வாகனத்தில்  ஏறிக்கொள்ளும்  போது அடைகின்ற வளர்ச்சி  அபரிமிதமானது.

               விஞ்ஞானி  ஐன்ஸ்டீன்னுடைய  வார்த்தைகளில் கூறவேண்டும்  என்றால்,       "  இது உலகத்தின் எட்டாவது அதிசயம்  "
                 நம் போன்ற  சாதாரண மக்களுக்கு  பளிச்சென்று  விலங்ககூடிய உதாரணம்,  நமக்கு  பக்கத்து வீட்டிலேயோ  அல்லது நமக்கோ கூட நடந்திருக்கும். அவசர  தேவை  காரணமாக  பல்லாயிரம்  பெறுமானமுள்ள  நகைகளை , அடமானமாக  கொடுத்து,  அதன்  மதிப்பில் ஒருசிறு பகுதியை  கடனாக     பெற்று,  ஒருசில மாதங்களிலேயே  நகை  முழ்கி,  ஏலம் போனதை பார்த்திருக்கலாம். அதற்கு அடிப்படையான  கணக்கீடு,  காம்ப்வுண்டிங் தான்.   அந்த பகாசுரனை, நமக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்ளும் போது, நம்மாலும்  அதன் பலனை அடைந்து கொள்ள முடியும்.  எவ்வளவு இளம் வயதில் சேமிக்க தொடங்குகிறோமோ,  அவ்வளவு விரைவாகவும், கூடுதலாகவும்,  நமது சொத்து  சேர்ப்பது  என்ற  இலக்கை   அடைந்து கொள்ள முடியும்.

                இளைஞர்களாகவும், திருமணம்  முடிக்காமலும் இருப்பவர்களிடம்  அதிகம்   இருப்பது நேரம் மட்டும் தான்.  இதில் ஒரு பெரும் பகுதியை, எதிகாலத்தை  கருத்தில் கொண்டு  பிரயோஜனமாக உபயோகித்துக்கொள்ளலாம். இக்காலங்களில் தான் அவர்களால் அதிகம் உழைக்க முடியும். வயதானாலோ, திருமணம் முடிந்தாலோ, பல்வேறு உடல் உபாதைகளும், பொறுப்புக்களும் வந்து சேர்ந்து,  ஓர் அளவிற்கு மேல் செயல்பட முடியாமல் போய்விடும். தற்பொழுது  செய்கின்ற தொழிலையோ, உத்யோகத்தையோ செய்து கொண்டு மற்ற நேரங்களில்  கூடுதல் வருமானத்திற்காக, உப தொழில் ஒன்றோ,  பகுதிநேர  உத்தியோகமோ செய்து,  வருகின்ற வருமானத்தை முழுக்க முழுக்க  சேமித்தால் சொத்து சேர்ப்பது என்ற இலக்கை அடைவது எளிதாகும்.

                 எப்படி இரண்டாவது வருமானத்திற்கு  வழி தேடுவது  என்பவர்களுக்கு.  அவரவர் திறமைக்கும், கற்பனைக்கும் , இருக்கின்ற  இடத்திற்கும் தகுந்தவாறு  செய்துகொள்ள வேண்டியதுதான். உதாரணத்திற்கு சில,  டியூசன்  எடுப்பது, வெளிநாட்டு பொருள்களை விற்றுக்கொடுப்பது, செல்போன் ரிபேர் செய்வது, சிறு சிறு ஆப்  (APP ) செய்து கொடுப்பது. இன்னும் பல.

இறைவன் நாடினால் தொடர்வோம்.......
               .
  

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........